ADDED : நவ 16, 2024 02:08 AM

அ நிறம் | அளவு
புதுச்சேரி: கருவடிக்குப்பம் குரு சித்தானந்த சுவாமி கோவிலில், அன்னாபிேஷகம் விழாவில், பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
புதுச்சேரி கருவடிக்குப்பம் குரு சித்தானந்த சுவாமி கோவிலில், நேற்று மாலை அன்னாபிேஷகம் விழா நடந்தது. விழாவையொட்டி, மூலவர் மற்றும் நந்தியம் பகவானுக்கு, அபிேஷகம் செய்யப்பட்டது. தொடர்ந்து, பல வகையான காய்கறிகள் மற்றும் அன்னம் சாற்றி, அலங்காரம் செய்யப்பட்டது. சிறப்பு பூஜைகள் நடத்தி, மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர். அதனை அடுத்து, பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை, கோவில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.
