/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
அண்ணாதுரை பிறந்த நாள் விழா கொண்டாட்டம்
/
அண்ணாதுரை பிறந்த நாள் விழா கொண்டாட்டம்
ADDED : செப் 16, 2025 12:02 AM

புதுச்சேரி: தமிழக முன்னாள் முதல்வர் அண்ணாதுரை பிறந்த நாளை தி.மு.க.,- அ.தி.மு.க., உள்ளிட்ட கட்சிகள் சார்பில் கொண்டாடப்பட்டது.
தி.மு.க.,: மாநில அமைப்பாளர் சிவா தலைமையில் தி.மு.க.,வினர் சுதேசி மில்லில் இருந்து ஊர்வலமாக சென்று, அண்ணா சாலை சந்திப்பில் உள்ள அண்ணாதுரை சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
நிகழ்ச்சியில், அவைத் தலைவர் சிவக்குமார், எம்.எல்.ஏ.,க்கள் அனிபால் கென்னடி, செந்தில்குமார், சம்பத், துணை அமைப்பாளர்கள் குமார், தைரியநாதன், முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள் மூர்த்தி, நந்தா சரவணன், தலைமை செயற்குழு உறுப்பினர்கள் குமரவேல், லோகையன், மருத்துவர் அணி அமைப்பாளர் ஆனந்த் ஆரோக்கியராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
அ.தி.மு.க.,: மாநில செயலாளர் அன்பழகன் தலைமையில், அவைத் தலைவர் அன்பானந்தம், ஜெ. பேரவை செயலாளர் பாஸ்கர் முன்னிலையில் நிர்வாகிகள் கட்சி அலுவலகத்தில் இருந்து ஊர்வலமாக சென்று, அண்ணா சாலை சந்திப்பில் உள்ள அண்ணாதுரை சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
பொருளாளர் ரவிபாண்டுரங்கன், மாநில நிர்வாகிகள் ராஜாராமன், வீரம்மாள், நகர செயலாளர் அன்பழகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
அ.தி.மு.க., தொண்டர்கள் உரிமை மீட்பு குழு: மாநில செயலாளர் ஓம்சக்தி சேகர் தலைமையில் நிர்வாகிகள் ஊர்வலமாக சென்று அண்ணாதுரை சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
முன்னதாக, குயவர்பாளையம் லெனின் வீதியில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் அலங்கரிக்கப்பட்ட அண்ணாதுரை படத்திற்கு மலரஞ்சலி செலுத்தினர்.
நிகழ்ச்சியில், குப்புசாமி, மகேஸ்வரி, விஜயலட்சுமி, சதாசிவம், சங்கர், கமலா, ஓட்டுநர் அணி முருகன், தொகுதி செயலாளர்கள் வெங்கடேசன், அப்பாவு, சுந்தரமூர்த்தி உடனிருந்தனர்.
புதியநீதி கட்சி: மாநில அமைப்பாளர் தேவநாதன் தலைமையில் நிர்வாகிகள் ஊர்வலமாக சென்று அண்ணாதுரை சிலைக்கு மாலை அணிவித்து இனிப்பு வழங்கினர்.
நிர்வாகிகள் காமராஜ், நடராஜன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.