/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
அன்னை ராணி கான்வென்ட் பள்ளி 10ம் வகுப்பு, பிளஸ் 2 தேர்வில் சாதனை
/
அன்னை ராணி கான்வென்ட் பள்ளி 10ம் வகுப்பு, பிளஸ் 2 தேர்வில் சாதனை
அன்னை ராணி கான்வென்ட் பள்ளி 10ம் வகுப்பு, பிளஸ் 2 தேர்வில் சாதனை
அன்னை ராணி கான்வென்ட் பள்ளி 10ம் வகுப்பு, பிளஸ் 2 தேர்வில் சாதனை
ADDED : மே 16, 2025 02:25 AM

புதுச்சேரி: காட்டேரிக்குப்பம் அன்னை ராணி கான்வென்ட் சி.பி.எஸ்.இ., பள்ளி பிளஸ் 2 மற்றும் பத்தாம் வகுப்பு தேர்வில் சாதனை படைத்துள்ளது.
பள்ளியில் பிளஸ் 2 தேர்வு எழுதிய 68 மாணவர்களில், 67 மாணவர்கள் தேர்ச்சி பெற்றனர். பள்ளியளவில் மாணவர் விக்னேஷ் 484 மதிப்பெண்கள் பெற்று முதலிடம், மாணவர் பாலமுருகன் 480 மதிப்பெண்கள் பெற்று இரண்டாமிடம், மாணவி அபிநயா 448 மதிப்பெண்கள் பெற்று மூன்றாமிடம் பிடித்தனர். 480 மதிப்பெண்களுக்கு மேல் 2 பேரும், 400 மதிப்பெண்களுக்கு மேல் 9 பேரும், 350 மதிப்பெண்களுக்கு 9 பேரும், 300 மதிப்பெண்களுக்கு 31 பேரும் பெற்றுள்ளனர். ஆங்கிலத்தில் 99, கணிதம் 97, இயற்பியல் 95, வேதியியல் 99, உயிரியியல் 96, கம்பியூட்டர் 97 மதிப்பெண் எடுத்துள்ளனர்.
பத்தாம் வகுப்பு சி.பி.எஸ்.இ., தேர்வில் தேர்வு எழுதிய 90 மாணவர்களும் தேர்ச்சி பெற்றனர். மாணவி திவ்யாஸ்ரீ 465 மதிப்பெண்கள் பெற்று முதலிடமும், மாணவர் விஜய தர்ஷன் 460 மதிப்பெண் பெற்று இரண்டாமிடம், மாணவர் சந்தோஷ் 456 மதிப்பெண் பெற்று மூன்றாமிடம் பிடித்தனர். தமிழ், கணிதம் பாடத்தில் சென்டம் எடுத்துள்ளனர்.
பள்ளி முதல்வர் சண்முகம் கூறுகையில், 'இப்பள்ளியில் மாணவர்களுக்கு நீட், ஜே.இ.இ. கோச்சிங் இலவசமாக அளித்து வருகிறோம். இந்தாண்டு பத்தாம் வகுப்பு தேர்வில், பள்ளியில் முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவர்களுக்கு பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்பில் இலவச கல்வி வழங்கப்படும். பிளஸ் 2 தேர்வில் முதலிடம் பிடித்த மாணவர் விக்னேஷிற்கு ரூ. 50 ஆயிரம் ரொக்கப் பரிசு வழங்கப்பட உள்ளது. வெற்றிக்கு துணையாக இருந்த பெற்றோர்கள், ஆசிரியர்கள், மாணவர்களுக்கு நன்றி' என்றார்.