ADDED : மார் 16, 2026 04:30 AM
அ நிறம் | அளவு
அரியாங்குப்பம்: அரியாங்குப்பம் அரசு துவக்கப்பள்ளியில் ஆண்டு விழா நடந்தது.
பள்ளி பொறுப்பாசிரியர் பழனிராஜ் வரவேற்றார். சிறப்பு விருந்தினராக வட்டம் 2, பள்ளி துணை ஆய்வாளர் செல்வி, முன்னாள் பள்ளி துணை ஆய்வாளர் பக்கிரிசாமி, விளையாட்டு போட்டிகள் மற்றும் படிப்பில் சிறந்து விளக்கிய மாணவர்களுக்கு பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கினர்.
தொடர்ந்து, மாணர்களின் கலை நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சியில், மணவெளி தலைமை ஆசிரியர் சாந்தகுமாரி, ஆசிரியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். ஆசிரியர் பாரதி நன்றி கூறினார்.
