ADDED : மார் 30, 2025 03:07 AM

புதுச்சேரி : புனித பேட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நடந்த ஆண்டு விழாவில், போட்டிகள் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டன.
பள்ளியில் நடந்த நிகழ்ச்சியில் பள்ளி முதல்வர் ஸ்டெல்லா வரவேற்றார். பள்ளி தாளாளர் ரெஜிஸ் பிரடெரிக் ஆண்டறிக்கை வாசித்தார். பள்ளி மருத்துவ இயக்குநர் ஜீத்தா பிரடெரிக் முன்னிலை வகித்தார். சிறப்பு விருந்தினர்களாக அரசு செயலர் ஜவகர், முன்னாள் மாணவர் கிருஷ்ண சந்தர், ரெட்டியார்பாளையம் புனித அந்திரேயா பங்கு தந்தை ஜோசப் பால் ஆகியோர் மாணவர்களுக்கு பரிசு வழங்கி பாராட்டினர்.
வினாடி - வினா உள்ளிட்ட பல்வேறு போட்டிகளில் வெற்றிப்பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டன.
பணி நிறைவு பெற்ற ஆசிரியர்கள், ரெஜினா, தனலட்சுமி ஆகியோர் கவுரவிக்கப்பட்டது. ஆசிரியர்கள், பெற்றோர் உட்பட பலர் பங்கேற்றனர். மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடந்தது.