தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ ஜென்மராக்கினி அன்னை ஆலய ஆண்டு விழா

 ஜென்மராக்கினி அன்னை ஆலய ஆண்டு விழா

 ஜென்மராக்கினி அன்னை ஆலய ஆண்டு விழா


ADDED : மே 02, 2026 01:32 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 02, 2026 01:32 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுச்சேரி: உழவர்கரை ஜென்மராக்கினி அன்னை ஆலய ஆண்டு விழா நேற்று காலை கொடியேற்றத்துடன் விழா துவங்கியது.

விழாவில், கொடியானது, ஆலயத்தைச் சுற்றி வலம் வந்து ஏற்றப்பட்டது. காலை 6:30 மணிக்கு ஜான் போஸ்கோ தலைமையில் கொடியேற்ற திருப்பலி நடந்தது. மாலை 5:30 மணிக்கு தருமபுரி மறைமாவட்ட அலெக்சிஸ் தலைமையில் திருப்பலி நடந்த து. விழாவில் ஏராளமான கிறிஸ்துவர்கள் பங்கேற்றனர்.

இன்று (2ம் தேதி) துவங்கி வரும் 9ம் தேதி வரை காலை 6:30 மணிக்கு திருப்பலி, மாலை 5:30 மணிக்கு திருப்பலி மற்றும் தேர்பவனி நடக்கிறது. வரும் 10ம் தேதி, காலை 5:00 மணிக்கு திருப்பலி, காலை 7:00 மணிக்கு கும்பகோணம் மறைமாவட்ட ஜீவானந்தம் அமலநாதன் தலைமையில் பெருவிழா சிறப்பு கூட்டுத்திருப்பலி நடக்கிறது.

மாலை 5:30 மணிக்கு சேலம் மறைமாவட்ட அருள் செல்வம் ராயப்பன் தலைமையில் சிறப்பு கூட்டுத்திருப்பலி நடக்கிறது. இரவு 7:30 மணிக்கு ஆடம்பர தேர்பவனி நடைபெறும். நிகழ்ச்சி ஏற்பாடுகளை ஆலய நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us