ADDED : மார் 16, 2026 04:29 AM
புதுச்சேரி: புதுச்சேரி அரசு தேர்தலுக்கு முன், பல்வேறு நலத்திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறது. இந்த வரிசையில் காலி பணியிடங்களை நிரப்பவும் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இதுகுறித்து புதுச்சேரி தேர்வு ஆணையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு;
ஒருங்கிணைந்த பட்டதாரி நிலை தேர்வு மூலம் பொதுப்பணி, உள்ளாட்சி, துறைமுகம், அறிவியல் தொழில்நுட்பம், செய்தி விளம்பரத் துறை, மீன்வளம், கலை பண்பாடு, பணியாளர் நிர்வாக சீர்திருத்த துறையில் 221 மேல்நிலை எழுத்தர் பணி உட்பட 351 இடங்களும், பள்ளி நிலை தேர்வு மூலம் இளநிலை எழுத்தர் உட்பட 37 பணியிடங்களும் என, மொத்தம் 388 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது.
இதற்கான கல்வி தகுதி, எழுத்து தேர்வு பாடத்திட்டம், விண்ணப்பிக்கும் முறை புதுச்சேரி ஆள்சேர்ப்பு அரசின் இணைய தளத்தில் 'வெளியிடப்பட்டுள்ளது.
இந்த பதவிகளுக்கு வரும் 23ம் தேதி காலை 10 மணி முதல் முதல் ஏப்ரல் 14ம் தேதி வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.
இவ்வாறு கூறப்பட்டுள்ளது.
