/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
புதுச்சேரியில் 2026ம் ஆண்டிற்கான பொது விடுமுறை நாட்கள் அறிவிப்பு
/
புதுச்சேரியில் 2026ம் ஆண்டிற்கான பொது விடுமுறை நாட்கள் அறிவிப்பு
புதுச்சேரியில் 2026ம் ஆண்டிற்கான பொது விடுமுறை நாட்கள் அறிவிப்பு
புதுச்சேரியில் 2026ம் ஆண்டிற்கான பொது விடுமுறை நாட்கள் அறிவிப்பு
UPDATED : நவ 17, 2025 07:22 AM
ADDED : நவ 17, 2025 02:51 AM

புதுச்சேரி: புதுச்சேரி அரசு 2026ம் ஆண்டிற்கான பொது விடுமுறை தினங்கள் குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
புதுச்சேரி அரசின் கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து அரசு அலுவலங்கள், அரசு சார்பு நிறுவனங்கள், வாரியங்கள் மற்றும் கூட்டுறவு வங்கிகள் உள்ளிட்ட அனைத்து வங்கிகளுக்கும் ஒவ்வொரு ஆண்டும் பொது விடுமுறை அறிவிக்கப்படுவது வழக்கம். அதன்படி, 2026ம் ஆண்டிற்கான பொது விடுமுறை தினங்கள் குறித்த அறிவிப்பை புதுச்சேரி அரசு வெளியிட்டுள்ளது.
இதில் புதுச்சேரி, காரைக்கால், மாகே, ஏனாம் ஆகிய நான்கு பகுதிகளுக்கும் 17 நாட்கள் பொது விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆகஸ்ட் 16ம் தேதி சட்டப்பறிமாற்ற நாள் ஞாயிற்றுக்கிழமை வருவதால், பொது விடுமுறை பட்டியலில் சேர்க்கப்படவில்லை.
மேலும், கூட்டுறவு வங்கிகள் உள்ளிட்ட அனைத்து வங்கிகளுக்கும் 18 நாட்கள் பொது விடுமுறை நாட்களாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அதாவது, ஏப்ரல் 1ம் தேதியன்று, வருடாந்திர கணக்குகள் முடிக்கும் தினம் என்பதால் அன்றைய தினம் வங்கிகளுக்கு கூடுதலாக ஒரு நாள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
இதுதவிர, வரையறுக்கப்பட்ட விடுமுறை என்ற அடிப்படையில் 39 விடுமுறை நாட்களும் பட்டியலிடப்பட்டுள்ளது.
இந்த விடுமுறை பட்டியலில் 2 விடுமுறை நாட்களை அரசு ஊழியர்களை தேர்ந்தெடுத்து கொள்ளலாம்.
புதுச்சேரி மற்றும் காரைக்காலில் 2026ம் ஆண்டு பொது விடுமுறை தினங்கள்.
1. ஜனவரி 1ம் தேதி (வியாழன்) - ஆங்கிலப்புத்தாண்டு
2. ஜனவரி 15ம் தேதி (வியாழன்) - பொங்கல்
3. ஜனவரி 16ம் தேதி (வெள்ளி) - திருவள்ளுவர் தினம், மாட்டுப்பொங்கல்
4. ஜனவரி 26ம் தேதி (திங்கள்) - குடியரசு தினம்
5. மார்ச் 20ம் தேதி (வெள்ளி) - ரம்ஜான்
6. ஏப்ரல் 3ம் தேதி (வெள்ளி) - புனித வெள்ளி
7. ஏப்ரல் 14ம் தேதி (செவ்வாய்) - தமிழ் புத்தாண்டு, அம்பேத்கர் பிறந்தநாள்
8. மே 1ம் தேதி (வெள்ளி) - மே தினம்
9. மே 28ம் தேதி (வியாழன்) - பக்ரீத்
10. ஆகஸ்ட் 15ம் தேதி (சனி) - சுதந்திர தினம்
11. ஆகஸ்ட் 26ம் தேதி (புதன்) - மிலாடி நபி
12. செப்டம்பர் 14ம் தேதி (திங்கள்) - விநாயகர் சதுர்த்தி
13. அக்டோபர் 2ம் தேதி (வெள்ளி) - காந்தி ஜெயந்தி
14. அக்டோபர் 19ம் தேதி (திங்கள்) - சரஸ்வதி பூஜை, ஆயுதபூஜை
15. நவம்பர் 1ம் தேதி (ஞாயிறு) - புதுச்சேரி விடுதலை நாள்
16. நவம்பர் 8ம் தேதி (ஞாயிறு) - தீபாவளி
17. டிச.25ம் தேதி (வெள்ளி) - கிறிஸ்துமஸ்

