sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, டிசம்பர் 14, 2025 ,கார்த்திகை 28, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

பிரதான கட்சிகளின் வேட்பாளர்கள் அடுத்தடுத்து அறிவிப்பு! புதுச்சேரியில் களைகட்டத் துவங்கியது தேர்தல் களம்

/

பிரதான கட்சிகளின் வேட்பாளர்கள் அடுத்தடுத்து அறிவிப்பு! புதுச்சேரியில் களைகட்டத் துவங்கியது தேர்தல் களம்

பிரதான கட்சிகளின் வேட்பாளர்கள் அடுத்தடுத்து அறிவிப்பு! புதுச்சேரியில் களைகட்டத் துவங்கியது தேர்தல் களம்

பிரதான கட்சிகளின் வேட்பாளர்கள் அடுத்தடுத்து அறிவிப்பு! புதுச்சேரியில் களைகட்டத் துவங்கியது தேர்தல் களம்


ADDED : மார் 23, 2024 06:31 AM

Google News

ADDED : மார் 23, 2024 06:31 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி : பிரதான அரசியல் கட்சிகளின் அடுத்தடுத்த வேட்பாளர் அறிவிக்கப்பட்டதால், புதுச்சேரி லோக்சபா தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. பா.ஜ., வேட்பாளராக உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் அறிவிக்கப்பட்டுள்ளார்.

புதுச்சேரி இண்டியா கூட்டணியில் காங்., - தி.மு.க.,வும் புதுச்சேரி தொகுதியை பெறுவதில் தீவிரம் காட்டின. ஆனால் காங்., சிட்டிங் எம்.பி., என்பதால், புதுச்சேரி தொகுதி அக்கட்சிக்கு ஒதுக் கப்பட்டு வைத்திலிங்கம் எம்.பி., மீண்டும் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்.

அடுத்த, முக்கிய கட்சியான அ.தி.மு.க., வேட்பாளராக தமிழ்வேந்தனை அறிவித்து களத்தில் குதித் தது. ஆனால், தேசிய ஜனநாயக கூட்டணியில் பா.ஜ., போட்டியிடும் என, ஏற்கனவே முதல்வர் ரங்கசாமி அறிவித்தாலும் வேட்பாளர் தேர்வில் இழுபறி நீடித்தது.

புதுச்சேரியில் உள்ள பா.ஜ., தலைவர்களில் பெரும்பான்மை சமூகத்தை சேர்ந்த வரும், புதுச்சேரியின் நான்கு பிராந்தியங் களில் அறிமுகமானவருமான அமைச்சர் நமச்சிவாயம் போட்டியிட்டால் வெற்றி எளிதாகும் என பரிந்துரை செய்தார்.

ஆனால், உள்ளூர் அரசிலியல் தொடர அமைச்சர் நமச்சிவாயம் முனைப்பு காட்டியதால் பா.ஜ., வேட்பாளர் தேர்வில் கடந்த ஒன்னரை மாதமாக இழுபறி நீடித்து வந்தது.

மத்திய அமைச்சர் நிர்மலா சீத்தாராமன், கவர்னர் தமிழிசை, காரைக்கால் தொழிலதிபர் ராஜசேகரன், மாநில தலைவர் செல்வகணபதி, எம்.எல்.ஏ.,கள் கல்யாணசுந்தரம், ராமலிங்கம், சிவசங்கர் என பலரது பெயர்கள் அடிப்பட்டாலும் பா.ஜ.,மேலிடம் யாரை போட்டியிட டிக் செய்யவில்லை.

இதனால் வேட்பாளர் கூட கிடைக்காமல் பா.ஜ., திண்டாடுகின்றது என காங்., உள்ளிட் எதிர்கட்சிகள் கேலி செய்தன.

தற்போதைய சூழலில் உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் போட்டியிட்டால் மட்டுமே கட்சிக்கு வலு சேர்க்கும் என கருதிய கட்சி மேலிடம், புதுச்சேரி லோக்சபா தேர்தலில் அவரை நிறுத்த முடிவு செய்தது.

தொடர்ந்து உள்துறை அமைச்சர் நமச்சிவாயத்தையும் தொடர்பு கொண்டு புதுச்சேரி லோக்சபா தேர்தலில் போட்டியிட வேண்டும் என கேட்டுக்கொண்டது. யூனியன் பிரதேசத்திற்கு உரிய முக்கியத்துவம் அளிக்கும் வகை யில் உரிய பதவி வழங்கப்படும் என உறுதியளித்து, சம்மதிக்க வைத்தது.

தொடர்ந்து நேற்று வெளியான இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியலில் புதுச்சேரி தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளராக நமச்சிவாயத்தை பா.ஜ., அறிவித்துள்ளது. இதனால் ஒருவழியாக நீண்ட நாட்களாக நீடித்து வந்த இழுபறி முடிவுக்கு வந்தது.

முக்கிய கட்சிகளின் அடுத்தடுத்த வேட்பாளர் அறிவிப்பினால் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. புதுச்சேரி லோக்சபா தேர்தலில் இந்தமுறை பல்வேறு அரசியல் கட்சிகள், சுயேச்சைகள் களம் கண்டாலும், காங்., - பா.ஜ., - அ.தி.மு.க., இடையே மும்முனை போட்டி ஏற்பட்டுள்ளது.

ராஜினமா செய்வாரா?


லோக்சபா பா.ஜ.,வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ள நமச்சிவாயம் உள்துறை அமைச்சராகவும் உள்ளார். அவர் தனது பதவியை ராஜினமா செய்துவிட்டு நிற்பாரா அல்லது பதவியுடன் நிற்பாரா என சட்ட சிக்கல் எழுந்துள்ளது.

இது குறித்து தேர்தல் அதிகாரிகள் கூறுகையில், 'லோக்சபா தேர்தலில் போட்டியிடுவர்கள் ஆதாயம் தரும் பதவிகளில் இருக்க கூடாது என்று சொல்லப்பட்டாலும், சில விதி விலக்குகள் அளிக்கப்பட்டுள்ளன.

அமைச்சராக இருப்பவர்கள் லோக்சபா தேர்தலில் போட்டியிட அரசியல் அமைப்பு சட்டம் பிரிவு 102ல் விலக்கு உள்ளது. இதேபோல் 1959ல் இயற்றப்பட்ட பார்லிமெண்ட் உறுப்பினர் தகுதி இழப்பு சட்டத்திலும் அமைச்சர்கள், துணை அமைச்சர்கள் லோக்சபா தேர்தலில் போட்டியிடும் வகையில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

எனவே அமைச்சர் தனது பதவியை ராஜினமா செய்யாமல் போட்டியிட முடியும். ஒருவேளை லோக்சபா தேர்தலில் வெற்றிப் பெற்றால், அதன் பிறகு ராஜினாமா செய்தால் போதுமானது' என்றனர்.

ஆதரவு திரட்டினார்


பா.ஜ., வேட்பாளராக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்ட பின் நமச்சிவாயம் மாநிலம் முழுவதும் உள்ள பா.ஜ., நிர்வாகிகள், தனது முக்கிய ஆதரவாளர்களை தொடர்பு கொண்டு பேசினார்.

அனைவரையும் தேர்தல் பணிக்கு தயராகும்படி அழைப்பு விடுத்தார்.

இதனையடுத்து மாநிலம் முழுவதும் நமச்சிவாயம் ஆதரவாளர்கள் தேர்தல் பணிகளை முடுக்கிவிட்டுள்ளனர்.






      Dinamalar
      Follow us