பாத்திமா அன்னை ஆலயத்தில் ஆண்டு பெருவிழா கொடியேற்றம்
பாத்திமா அன்னை ஆலயத்தில் ஆண்டு பெருவிழா கொடியேற்றம்
UPDATED : அக் 05, 2026 12:00 AM
ADDED : அக் 04, 2026 05:36 PM

புதுச்சேரி: தட்டாஞ்சாவடி புனித பாத்திமா அன்னை ஆலயத்தின் 72வது ஆண்டு பெருவிழா நேற்று கொடியேற்றத்துடன் துவங்கியது.
இதையொட்டி, காலை 7:30 மணிக்கு புதுச்சேரி – கடலுார் உயர்மறை மாவட்ட முதன்மை குரு குழந்தைசாமி, பெத்தி செமினார் மேல்நிலைப் பள்ளி முதல்வர் ஆரோக்கியராஜ், தலைமையில் திருப்பலி நடந்தது.
தொடர்ந்து, ஆலயத்தின் கொடிமரத்தில் பெருவிழா கொடியேற்றம் நடந்தது. திரளான கிறிஸ்துவர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர். விழாயொட்டி, தினமும் காலையில் சிறப்பு திருப்பலி மற்றும் மாலையில் தேர்பவனி நடக்கிறது.
வரும் 11ம் தேதி காலை 7:30 மணிக்கு சென்னை, ஜாய்குரியன் தலைமையில் திருப்பலியும், 13ம் தேதி காலை 7:30 மணிக்கு புதுச்சேரி – கடலுார் உயர் மறைமாவட்ட பேராயர் பிரான்சிஸ் கலிஸ்ட் தலைமையில் திருப்பலியும், மாலை 6:00 மணிக்கு ஆடம்பர தேர்பவனியும் நடக்கிறது.
