/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
புனித பாத்திமா அன்னை ஆலயத்தில் ஆண்டு பெருவிழா கொடியேற்றம்
/
புனித பாத்திமா அன்னை ஆலயத்தில் ஆண்டு பெருவிழா கொடியேற்றம்
புனித பாத்திமா அன்னை ஆலயத்தில் ஆண்டு பெருவிழா கொடியேற்றம்
புனித பாத்திமா அன்னை ஆலயத்தில் ஆண்டு பெருவிழா கொடியேற்றம்
ADDED : அக் 05, 2025 11:00 PM

புதுச்சேரி: தட்டாஞ்சாவடி புனித பாத்திமா அன்னை ஆலயத் தின் 71வது ஆண்டு பெருவிழா நேற்று முன்தினம் கொடியேற்றத்துடன் துவங் கியது.
இதையொட்டி, காலை 7:30 மணிக்கு புதுச்சேரி - கடலுார் உயர்மறை மாவட்ட முதன்மை குரு குழந்தைசாமி, பெத்தி செமினார் மேல்நிலைப் பள்ளி துணை முதல்வர் சின்னப்பன் தலைமையில் திருப்பலி நடந்தது.
தொடர்ந்து, ஆலயத்தின் கொடிமரத்தில் பெருவிழா கொடியேற்றம் நடந்தது. திரளான கிறிஸ்துவர்கள், கலந்து கொண்டனர். விழாயொட்டி, தினமும் காலை யில் சிறப்பு திருப்பலி, மாலை யில் தேர்பவனி நடக்கிறது.
வரும் 12ம் தேதி காலை 7:30 மணிக்கு புதுச்சேரி - கடலுார் உயர்மறை மாவட்ட பேராயர் பிரான்சிஸ் கலிஸ்ட் தலைமையில் திருப்பலியும், 13ம் தேதி காலை 7:30 மணிக்கு குருக்களுக்கான பேராயரின் பதிலி தேவசகாயராஜ் தலைமையில் திருப்பலியும், மாலை 6:00 மணிக்கு ஆடம்பர தேர்பவனியும் நடக்கிறது.