/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
அரசு சட்ட கல்லுாரியில் ஆண்டு விளையாட்டு விழா
/
அரசு சட்ட கல்லுாரியில் ஆண்டு விளையாட்டு விழா
ADDED : ஏப் 10, 2025 04:21 AM

புதுச்சேரி: புதுச்சேரி அம்பேத்கர் அரசு சட்டக் கல்லுாரியில், ஆண்டு விளையாட்டு தின பரிசளிப்பு விழா நடந்தது.
கல்லுாரி முதல்வர் சீனிவாசன் வர வேற்றார். கல்யாண சுந்தரம் எம் எல்.ஏ., முன்னிலை வகித்தார். அமைச்சர் நமச்சிவாயம் பங்கேற்று, விளையாட்டு தினத்தையொட்டி நடந்த பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகள், பேராசிரியர்கள், ஊழியர்களுக்கு பரிசு வழங்கினார்.
தொடர்ந்து அவர் பேசுகையில், சட்டக் கல் லுாரி பல நீதிபதிகளை உருவாக்கியுள்ளது. இன்றைய காலகட்டத்தில் மாணவர்கள் முழு விருப்பத்துடன் சட்டம் பயின்று வருகின்றனர். மாணவர்கள் சட்டத்தை முறையாகப் படித்து, புதிய மாற்றங்களுக்கு ஏற்ப தங்களது அறிவை புதுப்பித்து, மக்களுக்கு நீதி வழங்க வேண்டும் என்றார். கல்லுாரியின் உடல் கல்வி இயக்குநர் மதிவாணன் நன்றி கூறினார்.