ADDED : அக் 09, 2025 02:08 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி: கூடப்பாக்கம் ஜவகர் துரோணா அகாடமியின் ஆண்டு விளையாட்டு விழா நடந்தது.
அகாடமியின் தலைவர் குருராஜ் தலைமை தாங்கினார். பேச்சாளர் விக்னேஷ்வரன், விளையாட்டு மற்றும் கல்வியில் சமநிலை முக்கியத்துவம் குறித்து மாணவர்களுக்கு ஊக்கமளித்து பேசினார்.
இதில், மாணவர்களுக்கான தடகளம் மற்றும் விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டு, வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. விழாவில், பெற்றோர், ஆசிரியர்கள், மாணவர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.