தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ சூடு பிடிக்கும் போலி மருந்து விவகாரம் மேலும் ஒரு கம்பெனியில் சோதனை

 சூடு பிடிக்கும் போலி மருந்து விவகாரம் மேலும் ஒரு கம்பெனியில் சோதனை

 சூடு பிடிக்கும் போலி மருந்து விவகாரம் மேலும் ஒரு கம்பெனியில் சோதனை


ADDED : நவ 29, 2025 07:05 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 29, 2025 07:05 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுச்சேரி: புதுச்சேரியில் பூதாகரமாக வெடித்துள்ள போலி மருந்து விவகாரம் தொடர்பாக மூன்றாம் நாளாக நேற்று திருபுவனையில் உள்ள மருந்து கம்பெனியில் சி.பி.சி.ஐ.டி., போலீசார் அதிரடி சோதனை மேற்கொண்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

'சன் பார்மசி' நிர்வாகம், தங்கள் நிறுவன மருந்துகள், புதுச்சேரியில் போலியாக தயாரிப்பதாக அளித்த புகாரின் பேரில், சி.பி.சி.ஐ.டி., போலீசார் வழக்கு பதிந்து, விசாரணை நடத்தினர்.

அதில், கிடைத்த தகவலின் பேரில் போலி லைசென்ஸ் எடுத்து கொடுத்தது தொடர்பாக காரைக்குடியை சேர்ந்த இருவரை கைது செய்தனர். போலி மருந்துகள் தயாரித்த மதுரையை சேர்ந்த ராஜா, என்பவரை தேடி வருகின்றனர்.

இந்நிலையில், கைது செய்யப்பட்ட இருவரை காவலில் எடுத்து விசாரணை நடத்தியதில், போலி லைசென்ஸ்சை பயன்படுத்தி, புதுச்சேரியில் 10 இடங்களில் போலி மருந்து தயாரித்தது தெரிய வந்தது. அதன்பேரில் குருமாம்பேட் மற்றும் மேட்டுப்பாளையம் தொழில்போட்டையில் உள்ள மூன்று குடோன்களில் அதிரடி சோதனை நடத்தி ரூ.40 கோடி மதிப்புள்ள போலி மருந்து மற்றும் இயந்திரங்களை பறிமுதல் செய்தனர். தொடர்ந்த, மூன்று குடோன்களுக்கும் நேற்று முன்தினம் இரவு 'சீல்' வைத்தனர்.

இந்நிலையில் மூன்றாம் நாளான நேற்று, இவ்வழக்கு தொடர்பாக திருபுவனையில் இயங்கி வரும் 'லார்வின் பார்மாசிட்டிகல்ஸ்' மருந்து கம்பெனியில் இன்ஸ்பெக்டர் பாபுஜி தலைமையில் மருந்து தர கட்டுப்பாட்டு அதிகாரி ஜெனிபர் தலைமையிலான குழுவினர் அதிரடியாக சோதனை மேற்கொண்டனர்.

இந்த சோதனை நேற்று இரவு 9 மணிக்கு மேலும் நீடித்தது. இச்சோதனை இன்றும் தொடரும் என போலீசார் கூறினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us