/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
இன்ஜினியரை தாக்கி வழிப்பறி வழக்கில் மேலும் ஒருவர் கைது
/
இன்ஜினியரை தாக்கி வழிப்பறி வழக்கில் மேலும் ஒருவர் கைது
இன்ஜினியரை தாக்கி வழிப்பறி வழக்கில் மேலும் ஒருவர் கைது
இன்ஜினியரை தாக்கி வழிப்பறி வழக்கில் மேலும் ஒருவர் கைது
ADDED : நவ 03, 2024 06:37 AM

உளுந்துார்பேட்டை,: உளுந்துார்பேட்டை அருகே காரில் வந்த சாப்ட்வேர் இன்ஜினியரை தாக்கி வழிப்பறி செய்த வழக்கில் மேலும் ஒருவரை போலீசார் கைது செய்தனர்.
புதுச்சேரி, ரத்னா நகர் பகுதியைச் சேர்ந்தவர் ராஜகணபதி, 40; சாப்ட்வேர் இன்ஜினியர். இவர், கடந்த மாதம் 8ம் தேதி தலைவாசல் அடுத்த வீரகனுார் சென்று, புதுச்சேரிக்கு திரும்பிக் கொண்டிருந்தார்.
அதிகாலை 2:00 மணியளவில், உளுந்துார்பேட்டை அடுத்த ஏ.குமாரமங்கலம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் காரை சாலையோரம் நிறுத்திவிட்டு இயற்கை உபாதைக்காக சென்றார்.
அங்கு பைக்கில் வந்த ஒரு பெண் உட்பட 4 பேர், ராஜகணபதியை தாக்கி அவர் அணிந்திருந்த 18 கிராம் எடையுள்ள இரு மோதிரம், மொபைல் போனை பறித்துச் சென்றனர். புகாரின் பேரில், உளுந்துார்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து, வழிபறியில் ஈடுபட்ட கள்ளக்குறிச்சி அடுத்த தியாகதுருகம் பகுதியைச் சேர்ந்த ரமேஷ் மனைவி ரம்யா, மற்றும் 17 வயது சிறுவனை கைது செய்தனர்
இவ்வழக்கு தொடர்பாக தியாகதுருகம் பகுதியைச் சேர்ந்த மணி மகன் அசோக், 25; என்பவரை நேற்று கைது செய்தனர். தலைமறைவாக உள்ள மேலும் ஒருவரை தேடி வருகின்றனர்.