/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
பழுதாகி நின்ற லாரி மீது மற்றொரு லாரி மோதி விபத்து
/
பழுதாகி நின்ற லாரி மீது மற்றொரு லாரி மோதி விபத்து
ADDED : மார் 07, 2024 04:02 AM

பாகூர் : சாலையில் பழுதாகி நின்றிருந்த டிப்பர் லாரி மீது, மற்றொரு லாரி மோதி விபத்திற்குள்ளானதில், டிரைவர் படுகாயமடைந்தார்.
திண்டிவனம் பகுதியில் இருந்து ஜல்லி ஏற்றிக் கொண்டு டிப்பர் லாரி (டி.என். 31 ஏ.ஏ 6900) விழுப்புரம் - நாகப்பட்டினம் புறவழிச்சாலை வழியாககடலுார் நோக்கி சென்று கொண்டிருந்தது.
பாகூர் அருகே ஆதிங்கப்பட்டு சாலை சந்திப்பில் சென்றபோது திடீரென பழுதடைந்து நடுவழியில் நின்றது. அப்போது, பின் தொடர்ந்து சென்ற புறவழிச்சாலை பணியில் ஈடுபடும் டிப்பர் லாரி (டி.என். 31 சி.இ 9253) பழுதாகி நின்றிருந்த லாரி மீது எதிர்பாராத விதமாக மோதியது.
இதில், டிப்பர் லாரி டிரைவர் படுகாயமடைந்து, இடுபாட்டில் சிக்கி கொண்டார். தகவலறிந்த புறவழிச்சாலை பணியாளர்கள், சம்பவ இடத்திற்கு சென்று, டிரைவரை மீட்டு, மருத்துவமனைக்கு அனுப்பினர். விபத்து குறித்து கிருமாம்பாக்கம் போக்குவரத்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

