/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
அந்தோணியர் ஆலய திருவிழா துவக்கம்
/
அந்தோணியர் ஆலய திருவிழா துவக்கம்
ADDED : ஜூலை 23, 2025 11:13 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி: புதுச்சேரி புனித புதுமை அந்தோணியர் ஆலயத் திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது.
புதுச்சேரி, மறைமலையடிகள் சாலை, உருளையான்பேட் முத்தமிழ் நகரில் உள்ள புனித புதுமை அந்தோணியர் ஆலயத் திருவிழா நேற்று முன்தினம் மாலை கொடியேற்றத்துடன் துவங்கியது.
விழாவில், பெத்தி செமினார் மேல்நிலைப் பள்ளி முதல்வர் அருட்தந்தை பாஸ்கல்ராஜ், அருட்தந்தைகள் தோமினிக் ரொசாரியோ, மெல்கி செதேக், சூசைராஜ், ஜான்பிரிட்டோ ஆகியோர் கலந்து கொண்டனர். வரும் 29ம் தேதி காலை 7:00 மணிக்கு திருப்பலி நடக்கிறது.