/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
போதை ஒழிப்பு விழிப்புணர்வு முகாம்
/
போதை ஒழிப்பு விழிப்புணர்வு முகாம்
ADDED : மார் 17, 2024 05:27 AM

நெட்டப்பாக்கம்: கரையாம்புத்துார் அரசு மேல்நிலைப் பள்ளியில் போதை ஒழிப்பு விழிப்புணர்வு முகாம் நடந்தது.
பள்ளி துணை முதல்வர் பிரேம்குமார் ஜூலியன் தலைமை தாங்கினார். தலைமையாசிரியர் ஜான்சி முன்னிலை வகித்தார். ஆசிரியை சாமுண்டீஸ்வரி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.
ஆசிரியர்கள் வசுமதி, உமாமகேஸ்வரி, குணா, விஜயக்குமாரி, மணிகண்டன், கார்த்திக்கேயன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
விழாவில், பள்ளி மாணவர்களுக்கு போதை ஒழிப்பு விழிப்புணர்வு குறித்து கோலப்போட்டி, ஓவியப்போட்டி, சுலோகன் எழுதும் போட்டி, கட்டுரைகள் போட்டிகள் நடத்தப்பட்டது. வெற்றிப் பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.
ஏற்பாடுகளை பொறுப்பாசிரியர் சதீஷ்குமார் செய்திருந்தார். ஆசிரியை விமலாதேவி நன்றி கூறினார்.

