/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
போதை பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு ஊர்வலம்
/
போதை பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு ஊர்வலம்
ADDED : அக் 12, 2024 05:25 AM
புதுச்சேரி: உலக மன நல தினத்தையொட்டி போதைப் பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.
போதை ஒழிப்பு குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், ஒலாந்தரியா தொண்டு நிறுவனம், நேற்று போதைப் பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு ஊர்வலத்தை நடத்தியது.
கம்பன் கலையரங்கத்தில் இருந்து புறப்பட்ட இந்த ஊர்வலம், தொண்டு நிறுவன இயக்குனர் செந்தில் குமரன் மற்றும் நிறுவன துணைத் தலைவர் அர்னா தெப்ளிக் இணைந்து துவக்கி வைத்தனர்.
இதில் தொண்டு நிறுவனத்தினர், ஐரோப்பிய தன்னார்வலர்கள், மாணவ - மாணவிகள் உள்ளிட்டோர் பங்கேற்று, போதை பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பதாகைகளை கையில் ஏந்தி சென்றனர்.
இந்த ஊர்வலம் கடற்கரை காந்தி சிலை அருகில் நிறைவு பெற்றது. நிகழ்ச்சியில் பங்கேற்றவர்கள் போதை ஒழிப்பு உறுதி மொழி ஏற்றனர்.