/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
போதைப் பொருள் தடுப்பு விழிப்புணர்வு பேரணி
/
போதைப் பொருள் தடுப்பு விழிப்புணர்வு பேரணி
ADDED : செப் 01, 2025 01:20 AM

திருக்கனுார் : திருக்கனுார் போலீஸ் நிலையம், சுப்ரமணிய பாரதி மேல்நிலைப் பள்ளி சமுதாய நலப்பணித் திட்டம் சார்பில் போதைப் பொருள் தடுப்பு விழிப்புணர்வு பேரணி நடந்தது.
நிகழ்ச்சிக்கு, டி.ஐ.ஜி., சத்தியசுந்தரம் தலைமை தாங்கி, போதைப் பொருள் தடுப்பு விழிப்புணர்வு பேரணியை கொடியசைத்து துவக்கி வைத்தார். முன்னதாக, போதைப் பொருட்களினால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து மாணவர்களுக்கு விழிப் புணர்வு ஏற்படுத்தினார்.
மேற்கு பகுதி எஸ்.பி., சுப்ரமணியன் முன்னிலை வகித்தார். இதில், இன்ஸ்பெக்டர்கள் ராஜகுமார், கீர்த்தி வர்மன், கலைச்செல்வன், சப் இன்ஸ்பெக்டர்கள் பிரியா, தமிழரசன் மற்றும் போலீசார் கலந்து கொண்டனர்.
போலீஸ் நிலையத்தில் துவங்கிய விழிப்புணர்வு பேரணி திருக்கனுார் கடை வீதி, கே.ஆர்.பாளையம், டி.வி.மலை ரோடு, வணிகர் வீதி வழியாக சென்று மீண்டும் போலீஸ் நிலையத்தில் முடிவடைந்தது.
பேரணியில் மாணவர்கள் போதைப் பொருட்கள் தடுப்பு குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி, துண்டு பிரசுரங்கள் வழங்கினர்.