தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ போதை ஒழிப்பு மாதர் சங்க கருத்தரங்கம்

போதை ஒழிப்பு மாதர் சங்க கருத்தரங்கம்

போதை ஒழிப்பு மாதர் சங்க கருத்தரங்கம்


ADDED : செப் 24, 2024 06:28 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 24, 2024 06:28 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுச்சேரி : வில்லியனுாரில் ஜனநாயக மாதர் சங்கம் சார்பில் 'போதையை ஒழிக்க பாதையை வகுப்போம்' என்ற தலைப்பில் சிறப்பு கருத்தரங்கம் நடந்தது.

வில்லியனுார், மண்ணாடிப்பட்டு கொம்யூன் கமிட்டிகள் இணைந்து நடத்திய கருத்தரங்கிற்கு கமிட்டி தலைவர்கள் மலர்விழி, சிவசங்கரி தலைமை தாங்கினர். அகில இந்திய துணை தலைவர் சுதாசுந்தரராமன் கருத்தரங்கை துவக்கி வைத்து பேசினார்.

ஓய்வுபெற்ற சுங்கத்துறை அதிகாரி சண்முகசுந்தரம், சி.ஐ.டி.யூ., மாநில தலைவர் பிரபுராஜ், மாதர் சங்க மாநில தலைவர் முனியம்மாள், செயலாளர் இளவரசி ஆகியோர் பேசினர்.

கூட்டத்தில் நிர்வாகிகள் சந்தியா, மாரிமுத்து, உமாசாந்தி, தவமணி, மங்கலட்சுமி உள்பட பலர் பங்கேற்றனர்.

பள்ளி, கல்லுாரிகள், வழிபாட்டு தலங்கள், மக்கள் வசிக்கும் பகுதியில் உள்ள மது கடைகளை அரசு மூட வேண்டும். மதுபான கடைகள் இயங்கும் நேரத்தை வரைமுறைப்படுத்த வேண்டும். கஞ்சா மற்றும் போதை பொருட்களை முற்றிலும் தடை செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us