ADDED : செப் 30, 2024 05:43 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நெட்டப்பாக்கம்: சூரமங்கலத்தில் கொசு மருந்து தெளிக்கும் பணியினை ஆணையர் ரமேஷ் துவக்கி வைத்தார்.
புதுச்சேரியில் டெங்கு வைரஸ் வேகமாக பரவி வருகிறது. நெட்டப்பாக்கம் தொகுதி முழுவதும் கொசு மருந்து தெளிக்க துணை சபாநாயகர் ராஜவேலு கொம்யூன் பஞ்சாயத்து ஆணையருக்கு அறிவுறுத்தியிருந்தார். இதையடுத்து நெட்ப்பாக்கம் கொம்யூன் பஞ்சாயத்து மூலம், கொம்யூன் பஞ்சாயத்திற்குட்பட்ட கிராமங்களில் கொசு மருந்து தெளிக்கும் பணி நேற்று முன்தினம் துவங்கியது. சூரமங்கலத்தில் நடந்த பணியினை ஆணையர் ரமேஷ் துவக்கி வைத்தார். இப்பணியில் டெங்கு தடுப்பு நோடல் அதிகாரி பிரபாகரன், ஊழியர்கள் கிருஷ்ணன், பால்ராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

