/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
போதை பொருள் தடுப்பு விழிப்புணர்வு ஊர்வலம்
/
போதை பொருள் தடுப்பு விழிப்புணர்வு ஊர்வலம்
ADDED : அக் 21, 2024 06:08 AM

நெட்டப்பாக்கம்: நெட்டப்பாக்கம் கம்பன் அரசு மேல்நிலைப் பள்ளி என்.எஸ்.எஸ்., சார்பில், போதைப் பொருள் தடுப்பு விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.
பள்ளி என்.எஸ்.எஸ்., ஒருங்கிணைப்பாளர் எழில்வேந்தன் தலைமை தாங்கினார். நெட்டப்பாக்கம் சப் இன்ஸ்பெக்டர் வீரபுத்திரன் ஊர்வலத்தை கொடியசைத்து துவக்கி வைத்தார்.
ஊர்வலத்தில் 50க்கும் மேற்பட்ட என்.எஸ்.எஸ்., மாணவர்கள் பங்கேற்று போதைப் பொருளால் ஏற்படும் பாதிப்புகள், அதனை தடுக்கும் வழிமுறைகள் குறித்தும், போதைக்கு எதிரான வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தி பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
ஊர்வலம் நெட்டப்பாக்கம், கரியமாணிக்கம், பண்டசோழநல்லுார், கல்மண்டபம் உள்ளிட்ட முக்கிய வழியாக சென்று மீண்டும் பள்ளியை வந்தடைந்தது.