தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/அனுபவ வித்யாஷ்ரம் பள்ளி 100 சதவீதம் தேர்ச்சி

அனுபவ வித்யாஷ்ரம் பள்ளி 100 சதவீதம் தேர்ச்சி

அனுபவ வித்யாஷ்ரம் பள்ளி 100 சதவீதம் தேர்ச்சி


UPDATED : மே 21, 2026 07:45 PM

ADDED : மே 21, 2026 07:31 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : மே 21, 2026 07:45 PM ADDED : மே 21, 2026 07:31 PM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: அனுபவ வித்யாஷ்ரம் மேல்நிலைப்பள்ளியில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவர்கள் பாராட்டப்பட்டனர்.

புதுச்சேரி பைபாஸ், ரெட்டியார்பாளையம் பகுதியில் இயங்கி வரும் அனுபவ வித்யாஷ்ரம் மேல்நிலைப்பள்ளி பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் தொடர்ந்து ஆறாவது முறையாக நுாறு சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளது. தற்போது பள்ளியில் தேர்வெழுதிய 30 பேரும் தேர்ச்சிப்பெற்றுள்ளனர்.

மாணவர் பாரத் 500க்கு 491 மதிப்பெண் பெற்று முதலிடம் பெற்றார். மாணவி கிருத்திகா 489 மதிப்பெண் பெற்று இரண்டாமிடம், மாணவி தீபஸ்ரீ 476 மதிப்பெண் பெற்று மூன்றாமிடம் பிடித்து சாதனை படைத்துள்ளனர்.

மேலும், 6 மாணவர்கள், 450 மதிப்பெண்களும், 8 மாணவர்கள் 400 மதிப்பெண் பெற்று சாதனை படைத்தனர். சாதனை புரிந்த மாணவர்களை பள்ளி சார்பில் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர். மாணவர்களுக்கு உதவியாக இருந்த பள்ளி ஆசிரியர்களுக்கு பாராட்டப்பட்டது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us