/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
அனுபவ் வித்யாஷ்ரம் பள்ளி ஆண்டு விழா
/
அனுபவ் வித்யாஷ்ரம் பள்ளி ஆண்டு விழா
ADDED : பிப் 16, 2026 07:02 AM

புதுச்சேரி: அரும்பார்த்தபுரம் பைபாஸ் ரோடு சாய் பாபா கோவில் எதிரில் உள்ள அனுபவ் வித்யாஷ்ரம் உயர்நிலைப் பள்ளியில் 11ம் ஆண்டு விழா, பள்ளி வளாகத்தில் நடந்தது.
அரசு கொறடா ஆறுமுகம் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு, விழாவை துவக்கி வைத்தார்.
பள்ளி தாளாளர் சவுகத் முன்னிலை வகித்தார். பள்ளி முதல்வர் சிவசுந்தரி நோக்கவுரையாற்றினார்.
முதலியார்பேட்டை இன்ஸ்பெக்டர் கண்ணன் சிறப்புரையாற்றினார்.
கடந்த ஆண்டு பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவர்களுக்கு, தனியார் பள்ளி கூட்டமைப்பு தலைவர் ரங்கநாதன், தொழிலதிபர் புவனேஸ்வரன்பரிசு வழங்கி பாராட்டினர். தொடர்ந்து சக்தி கோச்சிங் சென்டர் மேலாளர் முரளிதரனுக்கு நினைவு பரிசு வழங்கப்பட்டது.
மாணவர்களின் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடந்தது.

