/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
மாநில அளவிலான கைப்பந்து போட்டி வம்புப்பட்டு ஏ.பி.ஜே., அணி வெற்றி
/
மாநில அளவிலான கைப்பந்து போட்டி வம்புப்பட்டு ஏ.பி.ஜே., அணி வெற்றி
மாநில அளவிலான கைப்பந்து போட்டி வம்புப்பட்டு ஏ.பி.ஜே., அணி வெற்றி
மாநில அளவிலான கைப்பந்து போட்டி வம்புப்பட்டு ஏ.பி.ஜே., அணி வெற்றி
ADDED : அக் 03, 2024 05:28 AM
புதுச்சேரி : புதுச்சேரியில் நடந்த மாநில அளவிலான கைப்பந்து போட்டியில் வம்புப்பட்டு ஏ.பி.ஜே, அணி முதல் பரிசை பெற்றது.
புதுச்சேரி கைப்பந்து வாலிபால் அசோசியேஷன் சார்பில் மாநில அளவிலான கைப்பந்து போட்டி முத்தியால்பேட்டையில் கடந்த 27ம் தேதி துவங்கியது.
புதுச்சேரி, தமிழ்நாடு, ஆந்திரா, கேரளா உள்ளிட்ட பல்வேறு மாநில அணிகள் பங்கேற்றன. ஆண்கள் பிரிவில் 29 அணியும், பெண்கள் பிரிவில் 6 அணியும் பங்கேற்றன.
இதில், கூனிச்சம்பட்டு பீனிக்ஸ் ஸ்போர்ட்ஸ் கிளப் அணி, வம்புப்பட்டு ஏ.பி.ஜே அணி, பெண்கள் பிரிவில் காரைக்கால் மற்றும் புதுச்சேரி அணி இறுதி போட்டிக்கு தகுதி பெற்றன.
இறுதிப் போட்டியில் 23 க்கு 24 என்ற புள்ளி கணக்கில் கூனிச்சம்பட்டு அணியை வீழ்த்தி வம்புப்பட்டு ஏ.பி.ஜே., அணி வெற்றி பெற்றது. இதேபோன்று பெண்கள் பிரிவில் 22க்கு 23 என்ற புள்ளி கணக்கில் புதுச்சேரி பெண்கள் அணியை வீழ்த்தி காரைக்கால் அணி வெற்றி பெற்றது.
வெற்றி பெற்ற அணியினருக்கு புதுச்சேரி கைப்பந்து அசோசியேஷன் நிர்வாகிகள் கோப்பை மற்றும் பரிசுகள் வழங்கினர்.