அப்போலோ சிறப்பு நிபுணர்கள் 25ம் தேதி புதுச்சேரி வருகை
அப்போலோ சிறப்பு நிபுணர்கள் 25ம் தேதி புதுச்சேரி வருகை
ADDED : ஏப் 22, 2026 10:28 PM
அ நிறம் | அளவு
புதுச்சேரி: சென்னை அப்போலோ மருத்துவமனை மூட்டு மாற்று அறுவை சிகிச்சை சிறப்பு நிபுணர்கள் வரும் 25ம் தேதி புதுச்சேரிக்கு வருகை தந்து ஆலோசனை வழங்க உள்ளனர்.
புதுச்சேரி வெங்கட நகர் எண் 9, 5வது கிராசில் இயங்கும் டாக்டர் ஜி.எஸ்.ரெட்டி சூப்பர் ஸ்பெஷாலிட்டி கிளனிக்கிற்கு, சென்னை அப்போலோ மருத்துவமனை மூட்டு மாற்று அறுவை சிகிச்சை சிறப்பு நிபுணர்கள் மதன் மோகன், பிரவீன் ஆகியோர் வரும் 25ம் தேதி வருகை தந்து ஆலோசனை வழங்க உள்ளனர்.
இதில் மூட்டு வலி, இடுப்பு வலி, இடுப்பு மற்றும் மூட்டு மாற்று அறுவை சிகிச்சை மற்றும் எலும்பு சம்பந்தப்பட்ட அனைத்து பிரச்னைகளுக்கும் ஆலோசனை வழங்க உள்ளனர். காலை 10:00 மணி முதல் மதியம் 12:30 மணி வரை ஆலோசனை வழங்கப்படுகிறது. முன் பதிவிற்கு 94426 86168, 76958 32886 என்ற எண்களில் தொடர்பு கொள்ளவும்.
