அப்போலோ எலும்பியல் சிறப்பு நிபுணர் வரும் 29ம் தேதி புதுச்சேரி வருகை
அப்போலோ எலும்பியல் சிறப்பு நிபுணர் வரும் 29ம் தேதி புதுச்சேரி வருகை
ADDED : ஆக 25, 2026 08:14 PM
புதுச்சேரி: சென்னை அப்போலோ மருத்துவனையின் எலும்பியல் சிறப்பு நிபுணர் வரும் 29ம் தேதி, புதுச்சேரி அப்போலோ மருத்துவமனை தகவல் மையத்தில் ஆலோசனை வழங்குகிறார்.
சென்னை அப்போலோ மருத்துவமனையின் எலும்பியல் சிறப்பு நிபுணர் பாலச்சந்திரன், வரும் 29ம் தேதி, புதுச்சேரி, எல்லைப்பிள்ளை சாவடி, என்.டி.மஹால் எதிரில், 100 அடி ரோடு, எண்: 60, இயங்கி வரும் அப்போலோ மருத்துவமனை தகவல் மையத்தில், மாலை 4:30 மணி முதல் இரவு 6:00 மணி வரை மருத்துவ ஆலோசனை வழங்குகிறார்.
அதில், முழங்கால் மற்றும் தோள் வலி, சிக்கலான காயங்கள், முதுமையினால் ஏற்படும் மூட்டு அழற்சி, மூட்டு சீரமைப்பு, குழந்தை மருத்துவ எலும்பியல், மூட்டுகளில் விறைப்பு, முழங்கால், இடுப்பு, தோள் மற்றும் முழங்கை முழுமையாக மாற்றி பொருத்துதல், முதகெலும்பியல் ஊனம், முதுகெலும்பு பக்க வளைவு, முதுகெலும்பு முன்பக்க சாய்வு, முதுகு மற்றும் கழுத்து வலி சம்பந்தமாக தகுந்த மருத்துவ ஆலோசனை பெறலாம்.
டாக்டர் பாலச்சந்திரனை சந்தித்து ஆலோசனை பெற 0413– 4901083, 99446 63139, 82487 53248 என்ற மொபைல் எண்ணில் தொடர்பு கொண்டு முன்பதிவு செய்யலாம்.
