/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
அப்போலோ குழந்தை இதயவியல் நிபுணர் 7ம் தேதி புதுச்சேரி வருகை
/
அப்போலோ குழந்தை இதயவியல் நிபுணர் 7ம் தேதி புதுச்சேரி வருகை
அப்போலோ குழந்தை இதயவியல் நிபுணர் 7ம் தேதி புதுச்சேரி வருகை
அப்போலோ குழந்தை இதயவியல் நிபுணர் 7ம் தேதி புதுச்சேரி வருகை
ADDED : பிப் 05, 2026 05:46 AM
புதுச்சேரி: சென்னை அப்போலோ மருத்துவமனை குழந்தை இதயவியல் சிறப்பு நிபுணர் வரும் 7ம் தேதி புதுச்சேரிக்கு வருகை தந்து ஆலோசனை வழங்க உள்ளார்.
புதுச்சேரி எல்பிள்ளைச்சாவடி, 100 அடி ரோடு, என்.டி.மகால் எதிரில் அப்போலோ மருத்துவமனை தகவல் மையம் செயல்பட்டு வருகிறது. இந்த மையத்திற்கு சென்னை அப்போலோ மருத்துவமனை குழந்தை இதயவியல் சிறப்பு நிபுணர் முத்துகுமரன் வரும் 7ம் தேதி வருகை தந்து ஆலோசனை வழங்க உள்ளார்.
இதில், குழந்தைகளுக்கு மூச்சு திணறல், குறைவான உணவு உட்கொள்ளல், அதிகப்படியாக வியர்த்தல், உடல் எடை அதிகரிக்காமல் இருத்தல், குழந்தையின் மேனி நீல நிறமாதல், நடுக்கம், நினைவு இழத்தல் போன்ற குழந்தைகளின் பிரச்னைகளுக்கு ஆலோசனை பெறலாம்.
காலை 10:00 மணி முதல் மதியம் 1:00 மணி வரை ஆலோசனை வழங்கப்படுகிறது. முன் பதிவிற்கு 0413-4901083, 99446 63139, 82487 53248, என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம்.