அப்போலோ புரோட்டான் மருத்துவர் புதுச்சேரியில் நாளை ஆலோசனை
அப்போலோ புரோட்டான் மருத்துவர் புதுச்சேரியில் நாளை ஆலோசனை
ADDED : ஜன 03, 2025 07:10 AM
அ நிறம் | அளவு
புதுச்சேரி; சென்னை அப்போலோ புரோட்டான் மருத்துவமனை சிறுநீரக அறுவை சிகிச்சை நிபுணர் ஸ்ரீவத்ஸன், நாளை 4ம் தேதி புதுச்சேரியில் ஆலோசனை வழங்குகிறார்.
புதுச்சேரி ராஜிவ்காந்தி அரசு மகளிர் மற்றும் குழந்தைகள் மருத்துவமனை எதிரில் உள்ள அண்ணா நகர், எண் 22, 14வது குறுக்கு சாலையில், சென்னை அப்போலோ புரோட்டான் தகவல் மையத்தில், மதியம் 2:00 மணி முதல் 4:00 மணி வரை ஆலோசனை வழங்குகிறார்.
திடீர் உடல் எடை குறைவு, பசியின்மை, சிறுநீரில் ரத்தம், புரோஸ்டேட் பிரச்னை, அடிக்கடி சிறுநீர் கழித்தல், சிறுநீர் கழிப்பதில் சிரமம், சிறுநீர் கசிவு, முதுகு வலி, உடல் சோர்வு, கால்வலி, அல்சர் சிறுநீரக சம்பந்தப்பட்ட அனைத்து நோய்களுக்கும் ஆலோசனை வழங்குகிறார்.
ஆலோசனை பெற, 99430 99523, 72000 34137 ஆகிய மொபைல் எண்களில் முன்பதிவு செய்யவும்.
