அப்போலோ சிறப்பு நிபுணர் 4ம் தேதி புதுச்சேரி வருகை
அப்போலோ சிறப்பு நிபுணர் 4ம் தேதி புதுச்சேரி வருகை
ADDED : ஏப் 02, 2026 06:07 AM
புதுச்சேரி: சென்னை அப்போலோ மருத்துவமனை சிறப்பு நிபுணர் புதுச்சேரிக்கு வரும் 4ம் தேதி வருகை தந்து ஆலோசனை வழங்க உள்ளார்.
புதுச்சேரி எல்லைபிள்ளைச்சாவடி, 100 அடி ரோடு, என்.டி.மகால் எதிரில் அப்போலோ மருத்துவமனை தகவல் மையம் செயல்பட்டு வருகிறது. இந்த மையத்திற்கு அப்போலோ மருத்துவமனை சிறப்பு நிபுணர் டாக்டர் சாருமதி வரும் 4ம் தேதி வருகை தந்து ஆலோசனை வழங்க உள்ளார். இதில் அடி வயிற்றில் வலி, ரத்த கசிவு, சிறுநீர் பாதையில் நோய் தொற்றுகள், குழந்தையின்மை, கர்பப்பை மற்றும் சினைப்பையில் கட்டிகள், ஆபத்து நிறைந்த கர்ப்பம், மகளிர் சம்பந்தப்பட்ட அனைத்து பிரச்னைகளுக்கும், லாப்ரோஸ்கோபி சிகிச்சைக்கும் ஆலோசனை வழங்க உள்ளார்.
காலை 10:00 மணி முதல் மதியம் 1:00 மணி வரை ஆலோசனை வழங்கப்படுகிறது. முன் பதிவிற்கு 0413-4901083, 99446 63139, 82487 53248, எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
