/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
அப்போலோ ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை விழிப்புணர்வு சைக்கிள் பேரணி
/
அப்போலோ ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை விழிப்புணர்வு சைக்கிள் பேரணி
அப்போலோ ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை விழிப்புணர்வு சைக்கிள் பேரணி
அப்போலோ ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை விழிப்புணர்வு சைக்கிள் பேரணி
ADDED : டிச 10, 2024 07:08 AM

புதுச்சேரி; சென்னை வானகரம் பகுதியில் உள்ள அப்போலோ ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை சார்பில், வெர்டிகோ மற்றும் சமநிலை குறைபாடுகள் குறித்து விழிப்புணர்வு சைக்கிள் பேரணி நடந்தது.
புதுச்சேரி கடற்கரை சாலை, காந்தி சிலையில் இருந்து துவங்கி, சென்னை வானகரம் வரை, 150 கி.மீ., விழிப்புணர்வு சைக்கிள் பேரணியை, டாக்டர் ராகுல் ராகவன்மேனன் கொடியசைத்து துவக்கி வைத்தார்.
சிறப்பு மருத்துவர்கள் அரவிந்த் சம்பத், சதிஷ்குமார், கார்த்திக் மதேஷ், ஓய்வு பெற்ற, தமிழக காவல்துறை இயக்குநர் சைலேந்திரபாபு, முன்னிலை வகித்தனர்.
நரம்பியல், சிறப்பு மருத்துவர் மிச்சல் ஸ்ரப், அப்போலோ ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை மருத்துவர்கள், சிறப்பு மருத்துவர்கள், பிரபாஷ் பிரபாகரன், வெங்கட கார்த்திகேயன், தீரஜ் ரெட்டி, அருளாலன், சம்பத், விஷால் பவர், உட்பட, பல்வேறு நாடுகளில் இருந்த வந்த மருத்துவர்கள் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் பேசிய, மருத்துவமனையின் ஓய்வு பெற்ற தலைமை நிர்வாக அதிகாரி, ''மயக்கம் மற்றும் சமநிலை பாதிப்புகள் அன்றாட வாழ்க்கையை பாதிக்கின்றன.
ஆனால் முன்கூட்டியே கண்டறிந்தால், அதனை சரி செய்ய முடியும். விழிப்புணர்வு ஊக்குவிப்பது மட்டும் இல்லாமல், தடுப்பு, பராமரிப்பு, முழுமையான சுகாதார முயற்சிகள் மூலம் சரி செய்ய முடியும்'' என குறிப்பிட்டார்.

