/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
இன்டர்ன்ஷிப் பயிற்சிக்கு விண்ணப்பம் வரவேற்பு
/
இன்டர்ன்ஷிப் பயிற்சிக்கு விண்ணப்பம் வரவேற்பு
ADDED : அக் 18, 2024 06:12 AM
புதுச்சேரி: மத்திய அரசின் பி.எம். இன்டர்ன்ஷிப் பயிற்சிக்கு 25ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
மத்திய அரசு பி.எம். இன்டர்ஸ்ஷிப் 2024 திட்டத்தின் கீழ் பத்தாம் வகுப்பு, பிளஸ் 2, டிப்ளமோ, ஐ.டி.ஐ., மற்றும் கல்லுாரி முடித்த 21 முதல் 24 வயது வரை உள்ள ஒரு கோடி இளைஞர்களுக்கு ஒரு வருடம் பல்வேறு முன்னணி தொழில் நிறுவனங்களில் பயிற்சிகள் வழங்கப்பட்டு வேலைவாய்ப்பு உருவாக்கிட அறிவித்துள்ளது.
ஆர்வம் உள்ள இளைஞர்கள் PM-Internship.mca.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். மாதம் 5 ஆயிரம் உதவி தொகையாக பயிற்சியின்போது வழங்கப்படும். பயிற்சியில் சிறந்து விளங்கும் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்கப்படுகிறது.
அதிகம் படித்த மாநிலமாக சிறந்து விளங்கும் புதுச்சேரி இளைஞர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளலாம். வரும் 25ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
இத்தகவலை புதுச்சேரி பா.ஜ., மாநில கல்வியாளர் பிரிவு தலைவர் நாகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.