தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ மாநில கைவினை கலை விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

 மாநில கைவினை கலை விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

 மாநில கைவினை கலை விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு


ADDED : ஜன 19, 2026 04:59 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 19, 2026 04:59 AM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: மாநில கைவினை கலை விருதிற்கு விண்ணப்பிக்கலாம் என,மாவட்ட தொழில் மையம் பொது மேலாளர் கோவிந்தராஜன் தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு;

புதுச்சேரி அரசு மாவட்ட தொழில் மையத்தின் மூலம், பாரம்பரிய கைவினைப் கலையில் நீண்ட காலாமாக தொடர்ந்து ஈடுபட்டு, சிறந்த திறமையால் இந்த துறையில் முக்கிய பங்களிப்பு செய்துள்ள கலைஞர்களை ஊக்குவிக்கும் நோக்கத்தில் 2025-26ம் ஆண்டிற்கான மாநில கைவினை கலை விருதுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இதற்கு விண்ணப்பிப்போர் புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் வசிப்பவராக இருக்க வேண்டும். இந்திய அரசின கைவினைப் பொருட்கள் மேம்பாட்டு ஆணையர் வழங்கிய அடையாள அட்டையை வைத்திருக்க வேண்டும்.

குறைந்தது 20 ஆண்டுகள் தொடர்ச்சியான அனுபவம் கொண்டவராகவும். 30 வயதுக்கு குறையாதவராகவும் இருக்க வேண்டும். ஏற்கனவே மாநில விருது பெற்ற கைவினைஞரும். அதே கைவினைத் தொழிலுக்காக மீண்டும் ஒருமுறை மாநில விருது பெறத் தகுதியற்றவர்.

ஒவ்வொரு ஆண்டும் 5 நபர்களுக்கு விருதுகள் வழங்கப்படும். விருது பெறுபவர்களுக்கு ரூ.50 ஆயிரம் ரொக்கப் பரிசு, தாமிரபத்திரம் மற்றும் அங்கவஸ்திரம், சான்றிதழ் ஆகியவை வழங்கப்படும். விருது விண்ணப்பிக்க ஆர்வம் உள்ளவர்கள், விண்ணப்பப் படிவத்தை மாவட்ட தொழில் மையத்தில் அலுவலக வேலை நேரங்களில் பெற்றுக் கொள்ளலாம்.

விண்ணப்பத்தை நிரப்பி அதில் குறிப்பிடப்பட்டுள்ள அனைத்து தேவையான விவரங்களையும், ஆவணங்களையும் விருதுக்கான கைவினை படைப்பும் இணைத்து சமர்ப்பிக்க வேண்டும். அடுத்த மாதம் 6ம் தேதிவரை விண்ணப்பிக்கலாம். கூடுதல் விபரங்களுக்கு 0413-2248391 அல்லது 2249392 ஆகிய தொலைபேசி எண்களை தொடர்புகொள்ளவும். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us