/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
பி.எஸ்.என்.எல்., சேவை மையங்களை இயக்க விண்ணப்பங்கள் வரவேற்பு
/
பி.எஸ்.என்.எல்., சேவை மையங்களை இயக்க விண்ணப்பங்கள் வரவேற்பு
பி.எஸ்.என்.எல்., சேவை மையங்களை இயக்க விண்ணப்பங்கள் வரவேற்பு
பி.எஸ்.என்.எல்., சேவை மையங்களை இயக்க விண்ணப்பங்கள் வரவேற்பு
ADDED : நவ 10, 2025 03:28 AM
புதுச்சேரி: பாண்டிச்சேரி பிசினஸ் ஏரியாவில் பி.எஸ்.என்.எல்., வாடிக்கையாளர் சேவை மையங்களை (சி.எஸ்.சி) இயக்குவதற்கும், பராமரிப்பதற்கும் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
உதவி பொது மேலாளர் விடுத்துள்ள செய்திக் குறிப்பு:
பி.எஸ்.என்.எல்., தமிழ்நாடு வட்டத்தின் பாண்டிச்சேரி பிசினஸ் ஏரியாவின் கீழ், வில்லியனுார் மற்றும் மேட்டுப்பாளையம் பகுதிகளில் உள்ளவாடிக்கையாளர் சேவை மையங்களின் (சி.எஸ்.சி) செயல்பாடு மற்றும் பராமரிப்பை நிர்வகிக்க தொழில் முனைவோர் மற்றும் வணிகநிறுவனங்களுக்கு அழைப்பு விடுக்கப்படுகிறது.
பி.எஸ்.என்.எல்., புதிய 4ஜி சிம் கார்டுகளை விற்பனை செய்தல், மொபைல் பிரிபெய்ட் ரீசார்ஜ்கள், 4ஜிசிம் மேம்படுத்தல், பைபர் அதிவேக இணைய இணைப்புகள் உள்ளிட்ட புதிய தொலைத்தொடர்பு சேவைகளுக்கான முன்பதிவு,பின் கட்டணங்களை ஏற்றுக்கொள்வது, திட்ட மாற்றங்கள் போன்ற பல்வேறு சேவைகளைவழங்குவதற்கான முதன்மை வாடிக்கையாளர் இடைமுகமாக செயல்படுகின்றன.
பி.எஸ்.என்.எல்., வாடிக்கையாளர்களின் விருப்பத்திற்கேற்ப சேவை தரத்தை மேம்படுத்தவும்,வணிக பங்குதாரர்களை பிசினஸ் பார்ட்னர்ஸ் ஈடுபடுத்துவதன் மூலம் சி.எஸ்.சி., களை திறம்பட இயக்கவும், சிறந்த வாடிக்கையாளர் சேவை மற்றும் அனுபவத்தையும் உறுதி செய்திடமுடியும்.
சி.எஸ்.சி., செயல்பாடுகளை நிர்வகிப்பதோடு, தேர்வு செய்யப்படும் ஏலதாரர்களுக்கு, சி.எஸ்.சி.,களில் பொது மக்களுக்கு ஆதார் சேவைகளை வழங்கவும் வாய்ப்பு வழங்கப்படும்.
ஆர்வமுள்ள நிறுவனங்கள் மற்றும் தொழில் முனைவோர் அதிகாரப்பூர்வ டெண்டர் போர்டல் மூலம் எக்ஸ்பிரசன் ஆப் இன்ட்ரெஸ்ட் ஆவணம், தகுதிவிவரங்கள் மற்றும் விண்ணப்ப செயல்முறையை https://www.etenders.gov.in/eprocure/app மற்றும் https://bsnl.co.in/tenders/tenderlivesearch இணைய தளங்களில் தெரிந்து கொள்ளலாம். விண்ணப்பங்களை வரும் 27 ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.
இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

