/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
2 ஆண்டு ஆசிரியர் படிப்புக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு
/
2 ஆண்டு ஆசிரியர் படிப்புக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு
2 ஆண்டு ஆசிரியர் படிப்புக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு
2 ஆண்டு ஆசிரியர் படிப்புக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு
ADDED : ஜூலை 04, 2025 02:25 AM
புதுச்சேரி: காரைக்கால் காமராஜர் கல்வியியல் கல்லுாரியில் இரண்டாண்டுஆசிரியர் படிப்புக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
கல்லுாரி முதல்வர் கந்தவேல் செய்திக்குறிப்பு:
காரைக்கால் பெருந்தலைவர் காமராஜர் கல்வியியல் கல்லுாரியில் இளங்கலை மற்றும் முதுகலை பட்டப்படிப்பு முடித்தவர்களுக்கான இரண்டாண்டு பி.எட்., ஆசிரியர் பட்டப்படிப்பிற்கு, புதுச்சேரி மாநிலத்தைச் சேர்ந்த தகுதியுள்ள மாணவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பம் கல்லுாரியின் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.
இந்த விண்ணப்பத்தை கடந்த 1ம் தேதி முதல் பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை, நகல் சான்றிதழ்களுடன் தபால் மூலமாகவோ அல்லது நேரிலோ வரும் 31ம் தேதிக்குள் சமர்ப்பிக்கலாம்.
சேர்க்கைக்கான கல்வித்தகுதிகள், கட்டண விபரம் ஆகியவற்றை www.pkcekkl.in என்ற இணையதள முகவரியிலோ அல்லது அனைத்து அலுவலக நாட்களில் கல்லுாரியில் நேரில் அணுகி தகவல் பெறலாம்.
தகுதியுள்ள பிற மாநிலத்தவரும் விண்ணப்பிக்கலாம்.
புதுச்சேரி மாணவர்கள் சேர்க்கைக்குப் பிறகு காலியிடங்கள் இருப்பின் பிற மாநிலத்தவரின் விண்ணப்பங்கள் நிபந்தனைகளுக்குட்பட்டு பரிசீலிக்கப்படும்.
இவ்வாறு அதில், கூறப்பட்டுள்ளது.