அழகு நகை தயாரிப்பு பயிற்சி விண்ணப்பங்கள் வரவேற்பு
அழகு நகை தயாரிப்பு பயிற்சி விண்ணப்பங்கள் வரவேற்பு
ADDED : பிப் 03, 2026 04:33 AM
அ நிறம் | அளவு
புதுச்சேரி: புதுச்சேரி லெனின் வீதியில், இந்தியன் வங்கி ஊரக சுயவேலை வாய்ப்பு பயிற்சி நிறுவனத்தில் அழகு நகைகள் தயாரிப்பு பயிற்சி பெற விண்ணப்பங்கள் வழங்கப்பட்டு வருகிறது. புதுச்சேரியை சேர்ந்த 18 முதல் 45 வயது வரை உள்ள, 8ம் வகுப்பு படித்த பெண்கள் மட்டும் விண்ணப்பிக்கலாம்.
14 நாட்கள் இலவச பயிற்சியில், உணவு வழங்கப்படுகிறது. நாளை மறுநாள் (5ம் தேதி) விண்ணப்பிக்க கடைசி நாளாகும். பயிற்சி 8ம் தேதி துவங்குகிறது. ஆதார், ரேஷன் கார்டு நகல், 2 பாஸ்போர்ட் போட்டோ மற்றும் வங்கி கணக்கி புத்தகம் எடுத்து வரவும்.
மேலும், 8870497520, 0413-2246500 எண்ணில் தொடர்பு கொண்டு, முன்பதிவு செய்யவும். இவ்வாறு அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.
