தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/அழகு நகை தயாரிக்க பயிற்சி விண்ணப்பங்கள் வரவேற்பு

அழகு நகை தயாரிக்க பயிற்சி விண்ணப்பங்கள் வரவேற்பு

அழகு நகை தயாரிக்க பயிற்சி விண்ணப்பங்கள் வரவேற்பு


ADDED : பிப் 10, 2024 06:23 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 10, 2024 06:23 AM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: இந்தியன் வங்கி ஊரக சுயவேலை வாய்ப்பு சார்பில், அழகு நகைகள் தயாரிப்பு பயிற்சிக்கான விண்ணப்பங்கள் வழங்கப்பட்டு வருகிறது.

புதுச்சேரி லெனின் வீதியில் இந்தியன் வங்கி ஊரக சுயவேலை வாய்ப்பு நிறுவனம் இயங்கி வருகிறது.

இந்நிறுவனத்தில், பெண்களுக்கான, அழகு நகைகள் தயாரிப்பு இலவச பயிற்சிக்கான விண்ணப்பங்கள் வழங்கப்பட்டு வருகிறது.

இப்பயிற்சிக்கு விண்ணப்பிக்க வரும் 15ம் தேதி கடைசி நாளாகும்.

பயிற்சி வரும் 19ம் தேதி துவங்கப்படுகிறது. பயிற்சியில் சேருவதற்கு 8ம் வகுப்பு படித்திருக்க வேண்டும்.

வயது, 18 முதல் 45 வரை இருக்க வேண்டும். 13 நாட்கள் நடக்கும் முழு பயிற்சியில் உணவு இலவசமாக வழங்கப்படுகிறது. கிராமப்புர பெண்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.

முன்பதிவு செய்ய, 9043489659, 8870497520, 0413 - 2246500 என்ற எண்ணிற்கு தொடர்பு கொள்ளவும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us