/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
பெண்களுக்கு எம்பிராய்டரி பயிற்சி விண்ணப்பங்கள் வரவேற்பு
/
பெண்களுக்கு எம்பிராய்டரி பயிற்சி விண்ணப்பங்கள் வரவேற்பு
பெண்களுக்கு எம்பிராய்டரி பயிற்சி விண்ணப்பங்கள் வரவேற்பு
பெண்களுக்கு எம்பிராய்டரி பயிற்சி விண்ணப்பங்கள் வரவேற்பு
ADDED : பிப் 05, 2025 05:54 AM
புதுச்சேரி: புதுச்சேரியில் ஆரி ஒர்க் மற்றும் எம்பிராய்டரி பயிற்சிக்கு பெண்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
புதுச்சேரி, குயவர்பாளையம், லெனின் வீதியில், இந்தியன் வங்கி ஊரக சுயவேலை வாய்ப்பு பயிற்சி நிறுவனத்தில், பல்வேறு தொழில்களுக்கு பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், அங்கு ஆரி ஒர்க் மற்றும் எம்பிராய்டர் பயிற்சிக்கு விண்ணப்பங்கள் வழங்கப்பட்டு வருகின்றன.
இதற்கு புதுச்சேரியை சேர்ந்த, 8ம் வகுப்பு படித்த, 18 முதல் 45 வயதுடைய பெண்கள் விண்ணப்பிக்கலாம். கிராமப்புறத்தில் இருந்து வருபவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.
மொத்தம், 30 நாட்கள் நடக்கும் பயிற்சியில், உணவு இலவசமாக வழங்கப்படும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் வரும், 10ம் தேதிக்குள் வந்து சேரவேண்டும். இந்த பயிற்சி, 12ம் தேதி துவங்குகிறது. மேலும், 8870497520, 0413 2246500 ஆகிய எண்களில் முன்பதிவு செய்ய வேண்டும்.