/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
ஊக்கத்தொகை பெறுவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்பு
/
ஊக்கத்தொகை பெறுவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்பு
ADDED : மே 24, 2025 03:23 AM
புதுச்சேரி: தென்னை, மரவள்ளி சாகுபடி ஊக்கத்தொகை பெறுவதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இதுகுறித்து வேளாண் இயக்குநர் (தோட்டக்கலை) அலுவலக செய்திக்குறிப்பு:
புதுச்சேரி அரசு வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறை, கூடுதல் வேளாண் இயக்குநர் தோட்டக்கலை அலுவலகம் மூலம் 2025-26ம் ஆண்டிற்கான தென்னை மற்றும் மரவள்ளி சாகுபடிக்கு ஊக்கத்தொகை பெறுவதற்கான விண்ணப்பங்கள் விவசாயிகளிடமிருந்து வரவேற்கப்படுகிறது.
விவசாயிகள் இவ்விண்ணப்பங்களை வரும் 26ம் தேதி முதல் புதுச்சேரி, தாவரவியல் பூங்காவில் உள்ள கூடுதல் வேளாண் இயக்குநர் தோட்டக்கலை அலுவலகம், அந்தந்த பகுதிகளில் உள்ள உழவர் உதவியகத்தில் பெற்றுக் கொள்ளலாம். மேலும், துறையின் https://agri.py.gov.in இணைய தளத்திலும் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை ஜூலை 30ம் தேதிக்குள் அந்தந்த பகுதியில் உள்ள உழவர் உதவியகத்தில், கூடுதல் வேளாண் இயக்குநர் தோட்டக்கலை அலுவலகம், தாவரவியல் பூங்காவில் சமர்ப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. இவ்வாறு அதில், கூறப்பட்டுள்ளது.