ADDED : ஏப் 24, 2026 07:16 PM
புதுச்சேரி, ஏப். 25-பள்ளி மாணவர்களுக்கான கோடை கால பயிற்சி வகுப்பு வரும் 2ம் தேதி துவங்குகிறது.
இதுகுறித்து பள்ளிக் கல்வி இயக்கக துணை இயக்குநர் கவுரி விடுத்துள்ள செய்திக்குறிப்பு:
கோடை விடுமுறையை முன்னிட்டு பள்ளிக் கல்வி இயக்ககத்தின் ஜவகர் சிறுவர் இல்லம் மூலம் பரதம், கிராமிய நடனம், வாய்ப்பாட்டு இசை, வயலின், வீணை, மிருதங்கம், ஓவியம், கைவினை, கிதார், கீபோர்டு, டிரம்ஸ், தேக்வாண்டோ மற்றும் கேரம், செஸ், இறகுபந்து, டேபிள் டென்னிஸ், கற்பிக்க சிறப்பு ஏற்பாடுகள் செய்துள்ளது.
வரும் 2ம் தேதி துவங்கி மே 31ம் தேதி வரை நடக்கும் இப்பயிற்சியில் 6 வயது முதல் 16 வயதுடைய பள்ளி மாணவ, மாணவிகள் பங்கேற்கலாம். பயிற்சி வகுப்பு காலை 9.00 மணி முதல் பிற்பகல் 12.00 மணிவரை (ஞாயிறு மற்றும் அரசு விடுமுறை நாட்கள் நீங்கலாக) ் நடைபெறும். இப்பயிற்சி புதுச்சேரி ஜவகர் இல்லம், லாஸ்பேட்டை கோலக்கார அரங்கசாமி நாயக்கர் அரசு நடுநிலைப்பள்ளி, காலப்பட்டு அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, கதிர்காமம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, வில்லியனுார் அரசு பெண்கள் நடுநிலைப்பள்ளி, திருவாண்டார்கோவில் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, பாகூர் அரசு நடுநிலைப்பள்ளி, கரியமாணிக்கம் அரசு நடுநிலைப்பள்ளி மற்றும் நோணாங்குப்பம் அரசு மேல்நிலைப்பள்ளிகளில் நடக்கிறது.
இதற்கான விண்ணப்பங்கள் வரும் 27ம் தேதி முதல் அந்தந்த மையங்களில் பெற்றுக்கொள்ளலாம். விண்ணப்பத்தை பூர்த்தி செய்து பள்ளிகளில் படிப்பதற்கான சான்றிதழ் அல்லது 2025-26 ஆண்டிற்கான பள்ளி அடையாள அட்டை, ஆதார் நகலுடன் சமர்பித்து சேர்ந்து கொள்ளலாம்.
மேலும் விபரங்களுக்கு 0413-2225751, 9443435129 ஆகிய தொலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம்.
