/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
குழந்தைகள் நலக்குழு பதவிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு
/
குழந்தைகள் நலக்குழு பதவிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு
குழந்தைகள் நலக்குழு பதவிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு
குழந்தைகள் நலக்குழு பதவிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு
ADDED : பிப் 19, 2024 05:10 AM
புதுச்சேரி: குழந்தைகள் நலக்குழு பதவிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
புதுச்சேரி மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை இயக்குனர் முத்துமீனா வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
புதுச்சேரி குழந்தைகள் மேம்பாட்டு துறையின் ஒரு பிரிவாக செயல்பட்டு வரும் புதுச்சேரி குழந்தைகள் பாதுகாப்பு சங்கமானது, புதுச்சேரி, காரைக்கால் மற்றும் மாகேவில் உள்ள குழந்தைகள் நலக்குழுவில் தலைவர், உறுப்பினர்கள் மற்றும் சிறார் நீதி வாரிய உறுப்பினர்கள் பதவிக்கு தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
இப்பதவிகளுக்கு புதுச்சேரியை பூர்வீகமாக கொண்டவர் கள் மற்றும் வசிப்பவர்கள் விண்ணப்பிக்கலாம்.
குழந்தைகள் நலக்குழு தலைவர் பதவிக்கு புதுச்சேரி- 1. காரைக்கால் -1, மாகே -1, உறுப்பினர்கள் பதவிக்கு புதுச்சேரி - 4. காரைக்கால் - 4. ஏனாம் - 4. சிறார் நீதி வாரிய உறுப் பினர்கள் பதவிக்கு புதுச் சேரி - 2, காரைக்கால் - 2. மாகே -2 என மொத்தம் 21 பதவி கள் நிரப்பப்பட உள்ளது.
இப்பதவிக்கான தகுதி கள் மற்றும் அமர்வு ஊதியம் உள்ளிட்ட விவ ரங்கள் https:wcd.py.gov.in, https://www.py.gov.in ஆகிய இணையதளத்தில் உள்ளன.
குழந்தைகள் நலக்குழு மற்றும் சிறார் நீதி வாரியத்துக்கு தேர்வு செய்யப்படும் தலைவர்கள் மற்றும் உறுப்பினர்கள் மூன்று ஆண்டு கள் பதவியில் இருப்பார்கள்.
மேற்கூறிய இணையதளத்தில் உள்ள விண்ணப்பத்தை தகுதியுள்ளவர்கள் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
பின்னர், விண்ணப்பங்களை பூர்த்தி செய்து மார்ச் 7ம் தேதி மாலை 5 மணிக்குள் இயக்குனர் மற்றும் உறுப்பினர் செயலர் (புதுச்சேரி குழந்தைகள் பாதுகாப்பு சங்கம்), மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட் டுத்துறை, ஹவுசிங் போர்டு வளாகம், புதுசாரம், புதுச்சேரி --605013 என்ற முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.
இவ்வாறு செய்திகுறிப்பில் கூறப்பட்டுள்ளது.

