/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
துணை தாசில்தார் பணிக்கு நாளை முதல் விண்ணப்பிக்கலாம்
/
துணை தாசில்தார் பணிக்கு நாளை முதல் விண்ணப்பிக்கலாம்
துணை தாசில்தார் பணிக்கு நாளை முதல் விண்ணப்பிக்கலாம்
துணை தாசில்தார் பணிக்கு நாளை முதல் விண்ணப்பிக்கலாம்
ADDED : மே 27, 2025 07:13 AM
புதுச்சேரி : வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறையில் காலியாக உள்ள 30 துணை தாசில்தார் பணியிடங்களுக்கு நாளை (28 ம் தேதி) முதல் விண்ணப்பிக்கலாம்.
வருவாய் துறை செயலர் குலோத்துங்கன் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:
புதுச்சேரி வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறையில் காலியாக உள்ள 30 துணை தாசில்தார் பணியிடங்கள் எழுத்துத் தேர்வு மூலம் நிரப்பப்படவுள்ளது. இப்பணிக்கு, மாநிலத்தை சேர்ந்த தகுதி வாய்ந்த நபர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
இதற்கான எழுத்து தேர்வுக்கு விண்ணப்பிக்கும் முறை, தேர்வு முறை மற்றும் பல்வேறு பிரிவுகளுக்கான காலியிடங்களின் பிரிவினை உள்ளடக்கிய விரிவான அறிவிப்பு நாளை 28ம் தேதி மதியம் 12:00 மணி முதல் நிர்வாக சீர்திருத்தத்துறையின் ஆட்சேர்ப்பு போார்ட்டலான https://recruitment.py.gov.in ல் காணலாம். பூர்த்தி செய்த விண்ணப்பங்களை வரும் ஜூன் 27 ம் தேதி மாலை 3:00 மணிக்குள் ஆன்லைன் மூலம் சமர்ப்பிக்க வேண்டும்.