/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
177 கட்டுமான உதவியாளர் பணியிடங்களுக்கு ஆன்லைனில் இன்று முதல் விண்ணப்பிக்கலாம்
/
177 கட்டுமான உதவியாளர் பணியிடங்களுக்கு ஆன்லைனில் இன்று முதல் விண்ணப்பிக்கலாம்
177 கட்டுமான உதவியாளர் பணியிடங்களுக்கு ஆன்லைனில் இன்று முதல் விண்ணப்பிக்கலாம்
177 கட்டுமான உதவியாளர் பணியிடங்களுக்கு ஆன்லைனில் இன்று முதல் விண்ணப்பிக்கலாம்
ADDED : ஏப் 05, 2025 04:12 AM
புதுச்சேரி: மின் துறையில் 177 கட்டுமான உதவியாளர் பணியிடங்களுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்.
புதுச்சேரி அரசு துறைகளில் காலியாக உள்ள 10 ஆயிரம் பணியிடங்கள் நிரப்பப்படும் என முதல்வர் ரங்கசாமி அறிவித்தார். அதன்படி, மின் துறையில் குரூப்-சி., அரசிதழ் பதிவு பெறாத பதவியான 177 கட்டுமான உதவியாளர் பணியிடங்களை நிரப்ப மின் துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
இன்று 5ம் தேதி காலை 10:00 மணி முதல் https://recruitment.py.gov.in என்ற ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். 25ம் தேதி மாலை 3:00 மணி வரை விண்ணப்பங்கள் பெறப்படும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்து, அடுத்த மாதம் 2ம் தேதி மாலை 3:00 மணிக்குள் கண்காணிப்பு பொறியாளர், மின் துறை அலுவலகம், என்.எஸ்.சி., போஸ் ரோடு, புதுச்சேரி- 605001 என்ற முகவரியில் சமர்ப்பிக்க வேண்டும்.
நிரப்பப்பட உள்ள 177 கட்டுமான உதவியாளர் பணியிடங்கள் பொது-76, எம்.பி.சி.,-31, எஸ்.சி.,-28, ஓ.பி.சி.,-19, இ.டபுள்யூ.எஸ்.,-17, முஸ்லீம்-2, மீனவர்-2, எஸ்.டி.,-1, பிற்படுத்தப்பட்ட பழங்குடியினர்-1 என்ற இட ஒதுக்கீடு அடிப்படையில் நிரப்பப்படும். மாற்றுத்திறனாளிகள்-7, முன்னாள் ராணுவ வீரர் வாரிசு-17, விளையாட்டு வீரர்-8 என உள் ஒதுக்கீடும் அளிக்கப்படுகிறது.
பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் எலெக்ட்ரீஷியன், ஒயர்மேன் டிரேடு இரண்டாண்டு கிராப்ட்ஸ்மேன்ஷிப் சான்றிதழ் பெற்றுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்து பிரிண்ட் அவுட் அனுப்பும்போது அசல் சான்றிதழ்களை அனுப்ப தேவையில்லை. சுயகையொப்பமிட்ட சான்றிதழ் நகல்களை இணைத்து அனுப்பினால் போதுமானது என, மின் துறை அறிவித்துள்ளது.