தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ நவோதயா பள்ளியில் சேர 23ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்

நவோதயா பள்ளியில் சேர 23ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்

நவோதயா பள்ளியில் சேர 23ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்


ADDED : அக் 18, 2025 07:56 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 18, 2025 07:56 AM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: புதுச்சேரி நவோதயா பள்ளியில் 9ம் வகுப்பு, பிளஸ் 1ல் சேருவதற்கு 23ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.

புதுச்சேரி ஜவகர் நவோதயா பள்ளி முதல்வர் கண்ணதாசன் செய்திக்குறிப்பு;

புதுச்சேரி, காலாப்பட்டு பகுதியில் மத்திய அரசு கல்வி அமைச்சகத்தின் கீழ் இயங்கி வரும் ஜவகர் நவோதயா வித்யாலயா பள்ளியில் 9வது மற்றும் பிளஸ் 1 வகுப்பில் (அறிவியல் மற்றும் வணிகவியல் பிரிவுகள்) உள்ள காலியிடங்களை நிரப்புவதற்காக நடத்தப்படும் தெரிவுநிலை தேர்வின் அடிப்படையில் சேர்வதற்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க கடைசி தேதி அக்டோபர் 21 என, அறிவிக்கப்பட்டிருந்தது.

தற்போது வரும் 23ம் தேதி வரை விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. https://cbseitms.nic.in/2025/nvsix-9/ மற்றும் https://cbseitms.nic.in/2025/nvsxi-11/ என்ற இணையதளங்களை முறையே 9வது, பிளஸ் 1ல் சேருவதற்காக விண்ணப்பிக்க பயன்படுத்தவும்.

இவ்வாறு அதில், கூறப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us