/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
கூட்டுறவு கல்வியியல் கல்லுாரியில் நாளை வரை விண்ணப்பிக்கலாம்
/
கூட்டுறவு கல்வியியல் கல்லுாரியில் நாளை வரை விண்ணப்பிக்கலாம்
கூட்டுறவு கல்வியியல் கல்லுாரியில் நாளை வரை விண்ணப்பிக்கலாம்
கூட்டுறவு கல்வியியல் கல்லுாரியில் நாளை வரை விண்ணப்பிக்கலாம்
ADDED : செப் 10, 2025 11:25 PM
புதுச்சேரி:கூட்டுறவு கல்வியியல் கல்லுாரியில் பி.எட்., படிப்பில் சேர, நாளை (12ம் தேதி) வரை, காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளது.
கூட்டுறவு கல்வியியல் கல்லுாரி மேலாண் இயக்குநர் வீரவெங்கடேஸ்வரி விடுத்துள்ள செய்திக் குறிப்பு:
கூட்டுறவு கல்வியியல் கல்லுாரியில் 2025-26ம் கல்வியாண்டில் பி.எட்., இரண்டாண்டு பட்டப்படிப்பிற்கு புதுச்சேரி மாநிலத்தை சார்ந்த பட்டப் படிப்பு முடித்த மாணவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இந்த விண்ணப்பம் கல்லுாரியின் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. கடந்த ஆக., 28ம் தேதி முதல் விண்ணப்பம் ஆன்லைனில் வழங்கப்பட்டு வருகிறது.
விண்ணப்பிக்க வரும் 12ம் தேதி வரை காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளது. எனவே விண்ணப்பித்தினை பதிவிறக்கம் செய்து, தேவையான நகல் சான்றிதழ்கள், கல்வி ஆவணங்களை இணைத்து தபால் மூலமாகவோ அல்லது நேரிலோ சமர்ப்பிக்கலாம்.
இந்த பி.எட்., படிப்பு சேர்க்கைக்கான கல்வி தகுதிகள், கட்டண விபரம் www.ccepdy.in என்ற இணையதள முகவரியில் பெறலாம். இல்லையெனில் அலுவலக நாட்களில் கல்லுாரியை நேரில் அணுகி தகவல் பெறலாம்.
தகுதியுள்ள பிற மாநிலத்தவரும் விண்ணப்பிக்கலாம். புதுச்சேரி மாணவர்கள் சேர்க்கைக்கு பிறகு காலியிடங்கள் இருந்தால், பிற மாநிலத்தவரின் விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்படும். கூடுதல் விபரங்களுக்கு 0413-2331407 என்ற தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளவும்.