/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
மொபைல் பழுது நீக்கம் பயிற்சி விண்ணப்பங்கள் வரவேற்பு
/
மொபைல் பழுது நீக்கம் பயிற்சி விண்ணப்பங்கள் வரவேற்பு
மொபைல் பழுது நீக்கம் பயிற்சி விண்ணப்பங்கள் வரவேற்பு
மொபைல் பழுது நீக்கம் பயிற்சி விண்ணப்பங்கள் வரவேற்பு
ADDED : ஜன 23, 2025 05:26 AM
புதுச்சேரி: மொபைல்போன் பழுநீக்குதல் பயிற்சிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
புதுச்சேரி லெனின் வீதியில், இந்தியன் வங்கி ஊரக சுயவேலை வாய்ப்பு பயிற்சி நிறுவனம் இயங்கி வருகிறது. பல்வேறு வேலை வாய்ப்பு தொடர்பாக, பயிற்சி அளிக்கும் இந்நிறுவனத்தில், மொபைல் போன், பழுது நீக்குதல் பயிற்சிக்கு விண்ணப்பங்கள் வழங்கப்பட்டு வருகிறது. விண்ணப்பிக்க கடைசி நாள் (24ம் தேதி) ஆகும். பயிற்சி 27ம் தேதி துவங்குகிறது.
பயிற்சியில் சேர, 8ம் வகுப்பு படித்திருக்க வேண்டும். 18 வயது முதல் 45 வரை, கிராமப்புற ஆண்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். பயிற்சி காலங்களில் உணவு இலவசமாக வழங்கப்படுகிறது.
புதுச்சேரி சேர்ந்தவர்கள் மட்டும் விண்ணப்பிக்கலாம்.மேலும், 0413 2246500, 8870497520 ஆகிய எண்களில் தொடர்பு கொண்டு, முன்பதிவு செய்யவும்.