/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
'டிரோன் டெக்னீஷியன்' பயிற்சி 20ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்
/
'டிரோன் டெக்னீஷியன்' பயிற்சி 20ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்
'டிரோன் டெக்னீஷியன்' பயிற்சி 20ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்
'டிரோன் டெக்னீஷியன்' பயிற்சி 20ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்
ADDED : ஜன 01, 2025 05:12 AM
புதுச்சேரி : புதுச்சேரியில் ஆறு மாத 'டிரோன் டெக்னீஷியன்' தொழிற்பயிற்சிக்கு வரும் 20ம் தேதிவரை விண்ணப்பிக்கலாம்.க்ஷ
தொழிலாளர் துறை பயிற்சி இயக்குனரகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
மேட்டுப்பாளையத்தில் உள்ள அரசு ஆண்கள் தொழிற்பயிற்சி நிலையத்தில், 'டிரோன் டெக்னீஷியன்' ஆறு மாத புதிய தொழிற்பயிற்சி பிரிவு துவங்கப்பட்டுள்ளது. புதிய பயிற்சி சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் கடந்த, டிச., 30ம் தேதி முதல் அந்த தொழிற்பயிற்சி நிலையத்திலேயே வழங்கப்பட்டு வருகிறது. இதில் சேர விரும்புவோர், பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை வரும் 20ம் தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும்.
கண்காணிப்பு, நில அளவை விவசாய இடுபொருள் தெளிப்பு, புகைப்படம் எடுத்தல் மற்றும் படப்பிடிப்பு உள்ளிட்டவற்றிற்கு, 'டிரோன்' தொழில் நுட்பம் பெரிதும் பயன்படுகிறது. இந்நிலையில் 'டிரோன்' உபகரணங்களை ஒன்றிணைத்தல், பழுது பார்த்தல் மற்றும் பராமரித்தல் போன்றவற்றை உள்ளடக்கியதாக, இந்த தொழிற்பயிற்சி இருக்கும்.
இதில் சேர குறைந்தபட்சமாக, 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். பட்டயம் மற்றும் பட்ட படிப்பு படித்தவர்கள் கூடுதல் கல்வி தகுதி மற்றும் வேலை வாய்ப்பை கருத்தில் கொண்டு, தங்களின், 10ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ் நகலை விண்ணப்பத்துடன் இணைத்து விண்ணப்பிக்கலாம்.
இருபாலரும் பயிற்சியில் சேர்ந்து பயன்பெறலாம். அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் சேரும் அனைவருக்கும் பயிற்சியின் போது, மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் உதவித்தொகை வழங்கப்படும்.
மேலும் மதிய உணவு மற்றும் இலவச சீருடை வழங்கப்படும். கூடுதல் விவரங்களுக்கு அலுவலக வேலை நாட்களில், 9894380176, என்ற மொபைல் எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.