/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
பொம்மைகள் தயாரிக்க பயிற்சி விண்ணப்பங்கள் வரவேற்பு
/
பொம்மைகள் தயாரிக்க பயிற்சி விண்ணப்பங்கள் வரவேற்பு
ADDED : மே 19, 2025 11:20 PM
புதுச்சேரி : இந்தியன் வங்கி ஊரக சுயவேலை வாய்ப்பு பயிற்சி நிறுவனம் சார்பில், பொம்மைகள் தயாரிப்பு பயிற்சிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
புதுச்சேரி லெனின் வீதியில் இந்தியன் வங்கி ஊரக சுயவேலை வாய்ப்பு பயிற்சி நிறுவனம் இயங்கி வருகிறது. இங்கு, புதுச்சேரியை சேர்ந்த 18 முதல் 45 வயதுள்ள பெண்களுக்கு பொம்மைகள் தயாரிப்பு பயிற்சிக்கு விண்ணப்பங்கள் வழங்கப்பட்டு வருகிறது.
இப்பயிற்சியில் சேர 8ம் வகுப்பு படித்திருக்க வேண்டும். நுாறு சதவீதம் இலவசமாக பயிற்சி அளிக் கப்படுகிறது. பயிற்சி காலங்களில், உணவுகள் வழங்கப்படுகிறது.
விண்ணப்பிக்க 23ம் தேதி கடைசி நாளாகும். வரும் 26ம் தேதி பயிற்சி துவங்குகிறது.
விண்ணப்பிக்கும் போது, ஆதார் அட்டை, ரேஷன் கார்டு, வங்கி பாஸ்புக், பாஸ்போர்ட் போட்டோ எடுத்து வரவும்.
மேலும், 8870497520, 0413 2246500 ஆகிய எண்களில் தொடர்பு கொண்டு முன்பதிவு செய்யவும்.