sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ பல்கலை., தொலைதுார படிப்புகளுக்கு 31ம் தேதிக்குள் விண்ணப்பிக்க அழைப்பு

பல்கலை., தொலைதுார படிப்புகளுக்கு 31ம் தேதிக்குள் விண்ணப்பிக்க அழைப்பு

பல்கலை., தொலைதுார படிப்புகளுக்கு 31ம் தேதிக்குள் விண்ணப்பிக்க அழைப்பு


ADDED : மார் 29, 2025 03:46 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 29, 2025 03:46 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: புதுச்சேரி பல்கலைக்கழக தொலைதுார படிப்புகளுக்கு வரும் 31ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.

பல்கலைக்கழக தொலைதுார கல்வி இயக்குநர் அர்விந்த் குப்தா செய்திக்குறிப்பு:

புதுச்சேரி பல்கலைக்கழகத்தின் தொலைதுாரக் கல்வி இயக்குநகரத்தால் மொத்தம் 20 பட்டப்படிப்புகள் வழங்கப்படுகிறது. இதில் 8 எம்.பி.ஏ., மேலாண்மை பட்டப்படிப்புகள் உள்ளன.

அவற்றில் சந்தைப்படுத்தல், நிதி, மனித வள மேலாண்மை, சர்வதேச வணிகம், பொது, சுற்றுலா, செயல்பாடுகள் மற்றும் விநியோகச் சங்கிலி மேலாண்மை மற்றும் மருத்துவமனை மேலாண்மை அடங்கும்.

மேலும், எம்.ஏ., - ஆங்கிலம், ஹிந்தி, சமூகவியல் மற்றும் எம்.காம்., என, நான்கு முதுநிலை படிப்புகள் உள்ளன. இது தவிர பி.பி.ஏ., பி.காம்., பி.ஏ., உள்ளிட்ட 8 இளநிலை படிப்புகளும் உள்ளன. இவற்றில் ஆங்கிலம், பொருளாதாரம், வரலாறு, அரசியல் அறிவியல், சமூகவியல் மற்றும் பத்திரிகை வெகுஜன தொடர்பு ஆகியவை அடங்கும்.

இந்த பட்டப்படிப்புகள் டில்லி ஏ.ஐ.சி.டி.சி., தொலைதுாரக் கல்விப் பணியகம் ஆகியவற்றால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. 2025ம் ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை தற்போது நடந்து வருகிறது. இவற்றில் சேர விரும்பும் மாணவர்கள் வரும் 31ம் தேதிக்குள் https://dde.pondiuni.edu.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.

ஏதேனும் விளக்கங்களுக்கு, உதவி மையத்தை 0413-2654439 என்ற எண்ணிலும் அல்லது ddehelpdesk@pondiuni.ac.in என்ற இ-மெயில் மூலாகவும் தொடர்பு கொள்ளலாம்.

இவ்வாறு அதில், கூறப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us